துபாய்: 
ர்சிபி தோல்விக்கும், கோலியின் முடிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை  என்று  மேற்கிந்திய கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
நடப்பு 14-வது ஐபிஎல் தொடரின் 31-வது போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் முடிவில் 92 ரன்களை மட்டுமே குவித்தது. அதன் பின்னர் விளையாடிய கொல்கத்தா அணியானது 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 94 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஆர்சிபி தோல்விக்கும், கோலியின் முடிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை  என்று  மேற்கிந்திய கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் மிகப்பெரிய தோல்விக்கு ஐபிஎல் அணியின் அணித் தலைவர் பதவியிலிருந்து விலகும் விராட் கோலியின் முடிவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் குழுவாகச் செயல்படும் அணியினர் இந்தாண்டு ஐபிஎல் கோப்பையை வெல்லவே விரும்புகின்றனர் என்றும் அவர் கூறினார்.