‘எங்கள் குழந்தைகளையும் பெண்களையும் போர்க்களத்தில் இழுக்காதீர்கள். நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். அதற்காக நாங்கள் பயப்படப்போவதில்லை என்று எச்சரித்துள்ளார்.
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற ஊழல் கடந்த ஆண்டு வெளியானது. இதில், ஹெச்டிஐஎல் நிறுவனத்தின் உரிமையாளர்கள் ராகேஷ் குமார் வாதவான், அவரின் மகன் சாரங் வாதவான், முன்னாள் தலைவர் வார்யம் சிங், முன்னாள் இயக்குநர் ஜோய் தாமஸ் ஆகியோர் வங்கியில் கடன் பெற்று பல கோடிகள் மோசடி செய்தது அம்பலமானது. இந்த வங்கியிலிருந்து கணக்கில் வராத பணம் எடுத்ததாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத் மனைவி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த மோசடி தொடர்பாக மாநில பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தியதுரு. இதில், பிஎம்சி வங்கிக்கு ரூ.4,355 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த விவகாரத்தை மத்திய அமலாக்கப்பிரிவு கையிலெடுத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு அங்கு ஆளும் கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. “அமலாக்கப்பிரிவு தேவையின்றி இந்த விவகாரத்தில் எங்களைக் குறிவைக்கிறது” என்று குற்றம் சாட்டியது.
இந்த நிலையில், சஞ்சய் ராவத் மனைவி விசாரணைக்கு இன்று (28ற்தேதி)( ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதனால் கடுப்பான சிவசேனா, மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு, இது பாஜக பிராந்திய அலுவலகம் என்று பேனர் கட்டியது.
இந்த நிலையில், சஞ்சய் ராவத் மத்தியஅரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். அதற்காக நாங்கள் பயப்பட மாட்டோம். ஆனால், எங்கள் குழந்தைகளையும் பெண்களையும் போர்க்களத்தில் இழுக்காதீர்கள் என்று எச்சரித்துள்ளார்.
இந்த வங்கி முறைகேடு தொடர்பாக, சமீபத்தில், பாஜகவில் இருந்து கடந்த மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்த மூத்த தலைவர் ஏக்நாத் கட்ஸேவும் வரும் 30-ம் தேதி மும்பையில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏக்நாத் கட்ஸே ஆஜராக உள்ளார்.