சென்னை:

னது நீதிபதி பதவி ராஜினாமா குறித்து விவாதம் வேண்டாம் என்று வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி  தஹில் ரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை உயர்நீதி மன்ற  தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமணி, மேகாலாய மாநில உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக பணி மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்ற ஒரு வருடத்திற்குள் அவர் மாற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சிறிய உயர்நீதி மன்றமான மேகாலயா உயர்நீதி மன்றத்திற்கு தஹில் ரமணி மாற்றப்பட்டது ‘பனிஸ்மென்ட் மாற்றம்’ என்று கூறப்படுகிறது.

இந்த பணி மாற்றத்துக்கு உயர்நீதி மன்ற வழக்கறிஞர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று தமிழகம் முழுவதும் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், நீதிபதி ராஜினாமா விவகாரத்தில் பல்வேறு கருத்துக்கள் எழுப்பப்பட்டு பகிரப்பட்டு, சர்சையாக்கப்பட்டு வந்த நிலையில், இது தொடர்பாக  “நான் எந்த கருத்தையும் தெரிவிக்க‘ வில்லை மேலும், அது தொடர்பாக விவாதிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்ட தாக   தகவல் வெளியாகி உள்ளது.

நீதிபதி பதவியை தஹில் ரமணி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நேற்று முதல் அவர் கோர்ட்டின் விசாரணையில் கலந்துகொள்ளவில்லை. அவரது அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட வழக்குகள் அனைத்தும், 2வது அமர்வுக்கு மாற்றப்பட்டுடள்ளது.