கொல்கத்தா:
மோடியை நான் பிரதமராகவே கருதாததால், புயல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
பிரதமர் மோடியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்த்து வருகிறார்.
தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடிக்கும் மம்தா பானர்ஜிக்கும் இடையே நடந்த வாய் சண்டை பரபரப்பை ஏற்படுத்தியது.
ஃபானி புயல் தொடர்பாக நிவாரணப் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால் மேற்கு வங்கத்தில் வேகத் தடை போடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மம்தா பானர்ஜியுடன் பேச நான் முயன்றேன்.
என்னிடம் பேச அவர் மறுத்துவிட்டார்.
மீண்டும் என்னை தொலைபேசியில் அழைப்பார் என காத்திருந்தேன். ஆனால் அவர் அழைக்கவில்லை என மேற்கு வங்க மாநிலம் தாம்லுக் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசினார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஜார்கிராமில் நடந்த தேர்தல் பேரணியில் பேசும்போது, மோடியை நான் பிரதமராகவே நினைக்கவில்லை. அதனால்தான் அவர் கூட்டிய கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
ஒரே மேடையில் மோடியை பார்க்க விரும்பவில்லை.
அடுத்த பிரதமரிடம்தான் பேசுவேன். ஃபானி புயல் பாதிப்புகளை நாங்களே சமாளித்துக் கொள்வோம்.
இன்னும் தேர்தல் நடைபெறவுள்ளதால், எங்களுக்கு மத்திய அரசின் உதவி தேவையில்லை.
இதற்கு பதிலடி கொடுத்த மம்தா பானர்ஜி, ஜெய் ஸ்ரீ ராம் என்பது பாஜகவின் கோஷம். இதனை எல்லோரும் உச்சரிக்க வேண்டும் என பாஜக விரும்புகிறது.
ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்போது மட்டும்தான் பாஜகவுக்கு ராமர் நினைவுக்கு வருவார்.
மேற்கு வங்கத்தின் கலாச்சாரத்தை அழிக்க பாஜக முயற்சிக்கிறது. ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட மேற்கு வங்க மக்கள் அனுமதிப்பதில்லை.
பொது இடங்களில் இவ்வாறு சொல்வது குற்றமாக பாவிக்கப்படும்.
துர்கா பூஜை செய்யும்போது ஜெய் மா துர்கா என்கின்றோம். காளி பூஜை செய்யும் போது,ஜெய்மா காளி என்று பாஜகவை உச்சரிப்பதுபோல் குறிப்பிட்ட கோஷத்தை போட முடியாது என்று குறிப்பிட்டார்.