சென்னை: வரும் வாரங்களில் விஜயின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி கேட்க வேண்டாம்: த.வெ.க. நிர்வாகிகளுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டங்களுக்கு தமிழ்நாடு காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதுடன், அவரது நிகழ்ச்சிகளுக்கான இடங்களை கொடுப்பதிலும் சிக்கல்கள் தொடர்கிறது. இதன் காரணமாக, திருச்சி அருகே கரூரில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயரிழந்த சோகம் அரங்கேறி உள்ளது. இதில், திமுக அரசு மீது ஒரு தரப்பும், தவெக மீது மற்றொரு தரப்பும் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், வரும் வாரங்களில் விஜயின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி கேட்க வேண்டாம் என த.வெ.க. நிர்வாகிகளுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியிலிருந்து மறு அறிவிப்பு வரும் வரை அடுத்து எந்தவொரு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யக்கூடாது எனவும் கட்சி தலைமை அறிவுறுதியுள்ளது.