
உராய், உ.பி.
உத்தரப்பிரதேசத்தில் விலையுயர்ந்த செடிகள் மற்றும் தாவரங்களை தின்ற கழுதைகளை சிறையில் அடைத்த விசித்திர சம்பவம் நடந்திருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஜலாவூன் மாவட்டத்தில் உராய் என்ற இடத்தில் சிறைச்சாலை உள்ளது. இதன் வளாகத்தில் அழகுக்காக ரூ.5 லட்சம் செலவில் விலையுயர்ந்த செடிகள் மற்றும் தாவரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த செடிகளை, அப்பகுதியில் உலவிக்கொண்டிருந்த எட்டு கழுதைகள் தின்று நாசம் செய்துவிட்டன. இதையடுத்து கடந்த 24ம் தேதி அந்த 8 கழுதைகளை ஜலாவூன் மாவட்ட காவல்துறையினர் கைது செய்து உராய் சிறையில் அடைத்துள்ளார்.
இந்த நிலையில் காணாமல் போன கழுதைகளின் உரிமையாளரான கமலேஷ் என்பவருக்கு தகவல் தெரியவந்தது. உடனே சிறை அதிகாரிகளிடம் சென்று, தனது கழுதைகளை விடுவிக்கும்படி முறையிட்டார். அதனை சிறை நிர்வாகம் மறுத்துள்ளது.
பிறகு அவர் பாஜகவின் உள்ளூர் பிரமுகர் சக்தி காகோயின் உதவியை நாடியுள்ளார். இதைத் தொடர்ந்து அவரது கழுதைகளை சிறை அதிகாரிகள் விடுவித்தனர். கிட்டத்தட்ட 4 நாட்கள் சிறையில் இருந்த கழுதைகள் விடுவிக்கப்பட்டன.
[youtube-feed feed=1]