நியூயார்க்:
கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பெறுவதற்கான சூழல் திருப்திகரமாக இல்லை என சீன பட்டதாரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் மீது வர்த்தகப் போரை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடுத்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள எமோரி பல்கலைக் கழகம் மே 16-ம் தேதி 2 சீன பேராசிரியர்களை பணியிலிருந்து நீக்கியது.
இதனையடுத்து, அமெரிக்காவில் மேற்படிப்புக்கு செல்வதற்கான சூழல் சரியில்லை என சீன கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீன மாணவர்களின் விசாவை அமெரிக்கா நிராகரிப்பதை சுட்டிக்காட்டி சீன அரசு தன் மாணவர்களை எச்சரித்துள்ளது.
இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகப் பதற்றம் காரணமாக சீன மாணவர்களின் விசாவை நிராகரிப்பது அதிகரித்து வருவதாக சீன அரசின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.