வாஷிங்டன்:

ந்த மாதம்  22-ந் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும்,  தென்கொரிய அதிபருடன் மூன் ஜேவும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

வடகொரி அதிபர் தென்கொரிய அதிபர்கள் சந்திப்பை தொடர்ந்து வடகொரிய அதிபர்  அணுஆயுத சோதனைகளை விலக்கிக் கொள்வதாக அறிவித்து வெள்ளைக்கொடியை காண்பித்து உள்ளார்.

இந்நிலையில், தென்கொரிய அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் நடைபெற உள்ள மூன்றாவது உச்ச மாநாட்டில் சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அமெரிக்க-தென்கொரிய நாடுகளுக்கிடையே நட்புறவு பலப்படும்” என வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து   ஜூன் மாத தொடக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னும் சந்தித்து நடத்த உள்ளனர். இதற்கு முன்னதாக தென்கொரிய அதிபருடன் டிரம்ப் சந்தித்து பேசுவது குறிப்பிடத்தக்கது.