வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், அவர் வரும் 20ந்தேதி நாட்டின் 16வது அதிபராக முறைப்படி பதவி ஏற்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அதிபர் டிரம்ப் தனது பதவியை 20ந்தேதி ராஜினாமா செய்வதாக முதன்முளையாக அதிகாரப்பூர்வமாக  ஒப்புக்கொண்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில்  தோல்வி அடைந்த அதிபர் டிரம்ப், அதை ஏற்க மறுத்து பல்வேறு சர்ச்சைக்குரிய வகையிலான கருத்துக்களை தெரிவித்து வந்தார். ஒரு கட்டத்தில் நீதிமன்றத்தின் உதவியை நாடினார். ஆனால், நீதிமன்றங்களும், அவரை கைவிட்டுவிட்ட நிலையில்,  வன்முறையை தூண்டும் வகையிலான வீடியோக்கள் வெளியிட்டு பதற்றத்தை உருவாக்கி வந்தார்.

இந்த நிலையில்,  அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன்  வரும்  20-ஆம் தேதி பதவி ஏற்கும் வகையில், அமெரிக்க நாடாளுமன்ற விதிப்படி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு   இன்று வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்று வந்தது.

இதுதொடர்பாக டிரம்ப் வெளியிட்ட வீடியோக்கள்  சமுக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், அவரது ஆதரவாளர்கள்   நாடாளுமன்றத்தை முறையிட்டு, நாடாளுமன்றத்துக்குள் புகுந்து கலவரம் செய்தனர். இதை ஒடுக்க தேசிய பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 6 மணி நேர போராட்டம் கட்டுக்குள் வந்தது.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டிரம்பின் செயலுக்கு உலக நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதே வேளையில்,  நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, அதிபர் டிரம்ப் ஆதரவாளர்களின் வன்முறையால், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை அங்கீகரிக்கும் சான்றிதழ் அளிப்பதில் பின்வாங்காப்படாது என்று தெரிவித்திருந்தார். அதனால், வன்முறை அடக்கப்பட்டதும் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஜோ பைடனுக்கு அதிபராக பதவி ஏற்க தேவையான சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதையடுத்து, அதிபர் டிரம்ப் வேறு வழியின்றி, தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளார்.  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20 ஆம் தேதி முதல் முறையாக பதவியில் இருந்து விலகுவதாக பகிரங்கமாக ஒப்புக் கொண்டார், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனின் தேர்தல் வெற்றியை காங்கிரஸ் உறுதிப்படுத்திய பின்னர், முதன்முறையாக அவர்  அதிகாரத்தை முறையாக மாற்றுவதாக உறுதியளித்தார்.

இதனால் ஜோ பைடன் ஜனவரி 20-ல் அதிபராக பதவி ஏற்பதும் உறுதியாகி உள்ளது.