வாஷிங்டன்:
டந்த சில நாட்களாக பிரபல ஜனநாயக கட்சித் தலைவரான பாரக் ஒபாமா ஃப்ளோரிடாவில் பல தேர்தல் கூட்டங்களை நடத்தி வருகிறார், அந்தக் கூட்டத்தில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொரோனாவின் மீடியா கவரேஜ் மீது பொறாமை கொள்கிறார் எனவும், வெள்ளை மாளிகையை அவர் சூடான மண்டலமாக மாற்றியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் மற்றும் துணை அதிபர் வேட்பாளருக்கு ஆதரவாக, முன்னாள் அமெரிக்க அதிபரும் ஜனநாயக கட்சி தலைவருமான பாரக் ஒபாமா பல இடங்களில் தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகிறார்.

ஃப்ளோரிடாவின் முக்கிய இடமான ஒர்லாண்டோ சிட்டியில் பிரச்சாரம் செய்தபோது பாரக் ஒபாமா தெரிவித்துள்ளதாவது: கொரோனா வைரஸ் வீடியோ கவரேஜ்ஜை கண்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பொறாமை கொள்கிறார், கடந்த சில நாட்களாக வெள்ளை மாளிகையை மிகவும் சூடான மண்டலமாக மாற்றி அமைத்துள்ளார் என்றும், ஆரம்பத்திலிருந்தே கொரோன வைரஸ் மீது கவனம் செலுத்தி அதை குறைக்க முற்பட்டிருந்தால், கொரோனா வைரஸால் இவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கமாட்டார்கள் என ஒபாமா தெரிவித்துள்ளார்.

மேலும் இங்கு ஒரு விஷயத்தை நான் வலியுறுத்த விரும்புகிறேன், நான் எதையும் மிகைப்படுத்தி கூறவில்லை… வார இறுதியில் அதிபர் டொனால்ட் ட்ரம்புடைய ஊழியர்களின் தலைவர், நாங்கள் இந்த தொற்று நோயை கட்டுபடுத்த தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளார், இதை எவ்வாறு எடுத்துக்கொள்வது என புரியவில்லை என்று தெரிவித்தார்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் அதிபர் ட்ரம்ப், பெரிதாக ஈடுபாடு காட்டியதாக தெரியவில்லை என தெரிவித்த ஒபாமா, ஃப்ளோரிடா மக்களிடம் சற்று யோசித்து பாருங்கள்… இங்கு சுற்றுலா துறை எவ்வளவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று.., என தெரிவித்துள்ளார். மேலும் பேசிய பாரக் ஒபாமா, அதிபர் டிரம்பின் சில கோட்பாடுகள் அனைவரும் நகைக்கும் வகையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.