
சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் படத்துக்கு இசையமைத்து வருகிறார்.
அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். உடன் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, சிவாங்கி, பால சரவணன், ராமதாஸ், காளி வெங்கட், மிர்ச்சி விஜய் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.
இப்படத்தில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘டான்’ படத்தை அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. அந்தப் போஸ்டர் இணையத்தில் வைரலாகிவருகிறது.
[youtube-feed feed=1]Here is the first look of #DON 😎 #DONFirstLook @Dir_Cibi @anirudhofficial @priyankaamohan @iam_SJSuryah @thondankani @sooriofficial @KalaiArasu_ @SKProdOffl @LycaProductions @bhaskaran_dop @Inagseditor @Bala_actor @RJVijayOfficial @sivaangi_k pic.twitter.com/Y0a8wGA4AK
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 10, 2021