பேஸ்புக் நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே பெரும் சர்ச்சையிலும், சிக்கலிலும் மாட்டிக்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த செவ்வாயன்று பேஸ்புக் மக்கள் தொடர்புத்துறை தலைவர் நிக் கிளெக் (இங்கிலாந்து முன்னாள் பிரதமர்) தெரிவித்துள்ள அறிக்கையில் பேஸ்புக்கில் பதிவிடும் அரசியல்வாதிகளின் கருத்துக்கள் பேஸ்புக் விதிமுறைகளை மீறினாலும் அவற்றை நீக்கவோ அல்லது தவறு என்று சுட்டவோ மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும்  அரசியல்வாதிகள் பேசும்போது குறுக்கிடுவது எங்கள் பங்கு அல்ல என்றும் ஒரு செய்தியை பார்த்தால் தீமையின் எண்ணிக்கையை விட அந்தச் செய்தியை பார்க்கும் எண்ணமுள்ளவர்கள் அதிகமாக இருந்தால் நிச்சயம்  அந்த செய்தியை நாங்கள் அனுமதிப்போம் என்றும் விளம்பரம் கொடுத்தால் மட்டுமே கட்டுப்பாடுகள் இருக்கும் என்றும்  ஒருவேளை  உண்மையாகவே ஒரு செய்தி வன்முறைக்கு வழி வகுத்தால் மட்டும்  அப்பதிவுகள் அகற்றப்படலாம்

இனிமேல் அரசியல்வாதிகளின் பேச்சை செய்திக்குரிய உள்ளடக்கமாக கருதுவோம், இது ஒரு பொது விதியாக, பார்க்கப்பட வேண்டும், கேட்கப்பட வேண்டும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்

2016 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பிற்கு ரஷ்யா உதவியதாக கூறப்பட்டது.  தேர்தல் சமயங்களின் சமூக வலைத்தளங்களின் தலையீடுகள்  தலையீட்டைத் தடுக்கவும், அரசியல் உள்ளடக்கம் குறித்த கொள்கைகள் குறித்து மிகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும் என்ற அழுத்தத்தம் அனைத்து சமூக ஊடகங்களுக்கும் உள்ளது. இந்நிலையில் தான் பேஸ்புக் மக்கள்தொடர்புத்துறை தலைவர் இச்செய்தியை வெளியிட்டு இருக்கிறார்

இச்செய்தியானது உலகம் முழுதும் உள்ள அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும் என்றும் சிலர்  தெரிவிக்கின்றனர்

-செல்வமுரளி