சென்னை,
வேந்தர் மூவிஸ் மதனின் சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது அமலாக்கத்துறை.
மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி வழக்கில் கைதாகி, தற்போது ஜாமினில் உள்ள வேந்தர் மூவிஸ் மதனின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமத்தின் கீழ் செயல்படும் மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாகச் சொல்லி பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததா, வேந்தர் மூவிஸ் அதிபர் மதன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் தலைமறைவானார்.
இது குறித்து வழக்கு பதியப்பட்டது. ஐந்து மாதங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்த மதனை காவல்துறையினர் கைது செய்தனர்.
தற்போது ஜாமினில் இருக்கும் மதனின் 6.35 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.