சமீபமாக மக்கள் அனைவரும் குரல் வழியாக பேசிக்கொள்ளும் கிளப் ஹவுஸ் எனப்படும் சமூக வலைதளம் பரவலாகி வருகிறது.

இந்த நிலையில் நேற்று ஒரு குழுவில் மருத்துவர் அரவிந்தராஜ், பாடகி சின்மயி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும், அவர் எந்த மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெறுகிறார் என்றும் அவருடைய மன நலன் பற்றியும் தனக்கு தெரியும் என பேசியுள்ளார்.

இந்த நிலையில் மருத்துவர் அரவிந்த் ராஜ் மீது சட்டரீதியான புகார் அளிக்க உள்ளதாக பாடகி சின்மயி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் மருத்துவர் அரவிந்த் ராஜ் பாடகியின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டதாகவும் அதனை அவர் எடுக்காததால் அவருடைய தாயிடம் 20 நிமிடங்கள் பேசி மன்னிப்பு கேட்டதாகவும் பேஸ்புக்கில் கூறியிருக்கிறார். இரவு மது அருந்திவிட்டு இதுபோன்ற தவறாக பேசி விட்டதாக ஒரு விளக்கம் அளித்திருக்கிறார்.