டில்லி

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரீத் பும்ராவுக்க் இடுப்பு முதுகெலும்பில் காயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் புகழ்பெற்ற இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் ஜஸ்பிரீத் பும்ரா.   சிறந்த பவுலர்களில் ஒருவரான இவருக்கு கிரிக்கெட் உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  சுமார் 25 வயதாகும் இவர் வலது கை பந்து வீச்சாளர் ஆவார்.

ஆஸ்திரேலியா, விக்டோரியா உள்ளிட்ட பல நாடுகளில் புகழ் பெற்ற பிசியோ தெரபிஸ்டான ஜான் கிளோஸ்டர் பல விளையாட்டு வீரர்களுக்கு சிகிச்சை அளித்தவர் ஆவார்.   இவர் உலகின் மிகச் சிறந்த விளையாட்டு பயிற்சியகமான டீகின் விளையாட்டு பள்ளியில் பணி புரிந்து வருகிறார்.

இவர், “பும்ரா எப்போதும் இறுதிக் கோட்டுக்கு சமீபத்தில் நின்ற படி கையை நீட்டி வேகமாக பந்து வீசுகிறார்.   இதனால் பந்து நன்கு சுழன்றபடி செல்கிறது.   இது போல் நிறைய வலது கை பந்து வீச்சாளர்கள் வீசி வருகின்றனர்.

அதே நேரத்தில்  இவர் சில நேரங்களில் தனது இடுப்பு முதுகெலும்பை மிகவும் முன்னோக்கி கொண்டு வந்து பந்து வீசுகிறார்.   இதனால் இவரது இடுப்பு முதுகெலும்பில் பாதிப்பு அல்லது காயம் ஏற்பட வாய்ப்புள்ளது” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.