“தமன்னாவே தான் வேணுமா?”

இந்தியாவில் குளிப்பதற்கு மக்களால் பயன்படுத்தப்படும் இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்பு ரகங்கள் ஏராளம்.

இருந்தாலும் சந்தனத்தின் கூடிய வாசம் என்றால் அதுவும் மைசூர் சாண்டல் சோப் மட்டுமே.

மைசூர் சாண்டல் போட்டு குளித்துவிட்டு வருபவரை நறுமண வாசனை கொண்டு உடனே அடையாளம் கண்டுபிடித்து விடலாம்.

இன்னமும் பன்னாட்டு நிறுவனங்களால் இந்த சாண்டல் சோப்பை அடிக்க முடியவில்லை.

கர்நாடகா சோப் அண்ட் டிடர்ஜென்ட் லிமிடெட் (KSDL) என்ற அரசு பொதுத்துறை நிறுவனத்தால் தயாரிக்கப்படுவது தான் இந்த சோப்.

மைசூர் சாண்டலை வர்த்தகத்தில் மேலும் பிரபலப்படுத்த பாலிவுட் நடிகை தமன்னாவை மாடலிங்காக கர்நாடகா அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதற்காக இரண்டு வருட காண்ட்ராக்ட் என 6.2 கோடி ரூபாய் சம்பள ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. நேற்று இதற்கான அரசு ஒப்பந்தமும் வெளியானது.

இங்குதான் பிரச்சனை ஆரம்பமானது.

கர்நாடக அரசு தயாரிக்கும் பாரம்பரியமிக்க மைசூர் சாண்டல் சோப்பை விளம்பரப்படுத்த கர்நாடகாவில் எந்த நடிகையும் கிடைக்கவில்லையா என்று சமூக வலைத்தளங்களில் கர்நாடக வாசிகள் பலத்தை எதிர்ப்பைக் காட்ட ஆரம்பித்துள்ளனர்.

பாலிவுட் நடிகையை அழைப்பதன் மூலம், கர்நாடகாவில் உள்ள நடிகைகள் மற்றும் மாடலிங்குகள் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் கொந்தளிக்கின்றனர்.

எங்கே எதை ஆரம்பித்தாலும் எப்படி எல்லாம் பிரச்சனைகள்!

– செய்திப் பிரிவு