ஐதராபாத்,

மது அண்டை மாநிலமான தெலுங்கானா மாநிலத்தில் நாளை மறுதினம் (31ந்தேதி) இரவு முதல் விவசாயி களுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கப்பட உள்ளதாக அம்மாநில மின்சார வாரியம் அறிவித்து உள்ளது. நாட்டிலோய விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் 24 மணி நேரமும் வழங்க உள்ள ஒரே மாநிலம் தெலுங்கானா மாநிலம்தான்.

தெலுங்கானா மாநில விவசாயிகளுக்கு புத்தாண்டு பரிசாக இலவச மின்சாரம் வழங்க சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கான அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் 31ந்தேதி இரவு முதல் இலவச மின்சார சேவை வழங்கப்படும் என தெலுங்கானா மின்வாரியம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தெலுங்கான மின்சார வாரியம் தெரிவித்திருப்பதாவது,  வரும்  டிசம்பர் 31-ம் தேதி இரவு முதல் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.

நாட்டிலேயே முதல் முறையாக விவசாயிகளுக்கு என 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கும் மாநிலம் தெலுங்கானா. இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும்.  அரசின் இந்த திட்டத்தின் மூலம் 23 லட்சம் விவசாய பம்ப் செட்கள் பயனடையும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என தெரிவித்துள்ளது.