மும்பை:

லகிலேயே அதிகம் நேரம் உழைக்கும் உழைப்பாளிகள் இந்தியர்கள் என்று ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது. மும்பையை சேர்ந்த தொழிலாளர்கள் தான்  அதிக நேரம் உழைக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த வங்கி ஒன்று, உலகம் முழுவதும் உள்ள உழைப்பாளர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அதன்படி அந்த வங்கி ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில்,  உலகில் அதிக நேரம் உழைப்பவர்கள் பட்டியலில் மும்பையை சேர்ந்த தொழிலாளர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும்,  மும்பையை சேர்ந்த தொழிலாளர்கள் ஆண்டு ஒன்றுக்கு  அதிகபட்சமாக 3,314.7 மணி நேரம் வேலை செய்கிறார்கள் என்று தெரிவித்து உள்ளது.

இந்த வரிசையில் டெல்லி 4வது இடத்தையும்,  ஹனோய் 2வது இடத்திலும், மெக்சிகோ சிட்டி 3வது இடத்திலும் உள்ளன.

அதேவேளையில், மும்பை தொழிலாளர்கள் அதிக அளிவலான உடல் உழைப்பை கொடுத்தாலும், அவர்களது வாழ்க்கைத் தரம் உயரவில்லை என்றும் தெரிவித்து உள்ளது.

நியூயார்க் நகரில் 54 மணி நேரம் வேலை பார்த்து கிடைக்கிற சம்பளத்தை வைத்து ஒரு ஐபோன்10-ஐ வாங்கி விடலாம். ஆனால், மும்பையில் வேலை பார்ப்பவர்கள் ஐபோன்10-ஐ மொபைலை வாங்க 917 மணி நேரம் உழைக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்தியாவில் உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.