சென்னை: கடந்த மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், ஒற்றை தலைமைக்கு ஆதரவாகவும், எடப்பாடிக்கு ஆதரவாக மெஜாரிட்டி பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு அளித்தது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. சூட்கேஸ்கள் கைமாறியதாக அண்டை மாநில அதிமுக செயலாளர் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியிட்டு உள்ளர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவை கைப்பற்ற எடப்பாடி, ஓபிஎஸ் இடையே கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், அதிமுக பொதுக்குழு பல்வேறு சர்ச்சை மற்றும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜூன் 23ந்தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் செயற்குழு ஒப்புதல் வழங்கிய தீர்மானங்கள், தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவைத்தலைவர்கள் தேர்வு மற்றும் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கம் போன்ற சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதைத்தொடரந்து அடுத்த பொதுக்குழு ஜூலை 11ந்தேதி நடைபெறும் என அவைத்தலைவர் அறிவித்து உள்ளார். இதுதொடர்பாக வழக்குகள் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், அதிமுக பொதுக் குழுவில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு  பெரும் தொகை  வாரி இறைக்கப்பட்டது. அதனால்தான் அவர்கள் அனைவரும், எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்தனர் என புதுச்சேரி மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர்  குற்றம் சாட்டி உள்ளர். இவர் ஓபிஎஸ் ஆதரவாளர் என்பது குறப்பிடததக்கது.

புதுச்சேரி  மேற்கு மாநில  செயலாளராக இருக்கும் ஓம்சக்தி சேகர்,  செய்தியாளர்களிடம் பேசியபோது,  அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப் பாளர் ஓ.பி.எஸ் அவமதிக்கப்பட்டார் என்று கூறியவர்,  ஓ.பி.எஸ்சை கழற்றிவிட்டுவிட்டு அதிமுக கட்சியை முழுமையாக கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி முயற்சித்து வருகிறார் என்று குற்றம் சாட்டினார். அதற்காக எடப்பாடி தரப்பல் இருந்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பணம் வாரி இறைக்கப்பட்டது என்றும், அதனால்தான்,அவர்கள் அனைவருக்கும் எடப்படிக்கு ஆதரவாக செயல்பட்டார்கள் எனற பகீர் தகவலையும் வெளியிட்டு உள்ளதுடன்,   பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட புதுச்சேரி கிழக்கு மாநில செயலாளர்  அன்பழகன்  எடப்படி கொடுத்த கொடுத்த மிகப்பெரிய தொகையை வாங்கி வந்து அவரது வீட்டில் வைத்துக் கொண்டார் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், அதிமுக  கண்டிப்பாக பிளவுப்பட போகிறது என்பது உறுதி. அதுபோல, கட்சிக்கு இனி ஒற்றை தலைமைதான் தேவை. இரட்டை  தலைமை ஏற்புடையதல்ல என்றவர்,  தமிழகத்தில் அதிமுக  ஒற்றை தலைமை ஏற்றவுடன் புதுச்சேரியில் அதிமுகவின் ஒற்றை தலைமையாக நான்தான்  இருப்பேன் என்றும் கூறினார்.