திருவில்லிபுத்தூர்

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இந்தியாவில் மிகப்  பெரிய தங்க விமானம் அமைக்கப்பட்டுள்ளது.

108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் முக்கியமானவற்றில் விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலும் ஒன்றாகும்.,   இந்த கோவிலில் ஏற்கனவே விமானம் இருந்த போதிலுமிதுவரை தங்க விமானம் செய்யப்படாமல் இருந்தது.

கோவில் தேவஸ்தானம் பக்தர்களின் கோரிக்கையின் பேரில் தங்க விமானம் செய்ய முடிவு எடுதஹ்டு.  இதையொட்டி தொழிலதிபர்கள் பக்தர்கள்எனப் பலரும் அளித்த உதவியின் அடிப்படையில் 78 கிலோ தங்கத்தில் ரூ.24 கோடி செலவில் தக்க விமானம் தயார் ஆகி உள்ளது.

நேற்று இந்த புதிய தங்க விமானத்தைச் சுற்றி இருந்த சாரங்கள் பிரிக்கப்பட்டன.  வெய்யிலில் இந்த தங்க விமானம் பள பள என ஜொலித்தது.  தங்க விமானம் அமைந்துள்ள மேற்புறப் பகுதியில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் இரவும் பகலுமாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து கோவில் நிர்வாக  அதிகாரி ராமராஜா, “திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்க விமானத்தை விட ஆண்டாள் கோவில் தங்க விமானம் பெரியது ஆகும்.   தற்போது இந்தியாவில் உள்ள கோவில்களில் மிகப் பெரிய தங்க விமானம் உள்ள கோவில் இந்த ஆண்டாள் கோவில் ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.