டில்லி

ந்திய மாவட்டங்களில் அதிக மொழி பேசும் மாவட்டம் எது என்பதை மத்திய மக்கள் தொகை இயக்ககம் தெரிவித்துள்ளது.

நாடெங்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பேசப்படும் மொழிகள் குறித்த கணக்கெடுப்பை மத்திய மக்கள் தொகை இயக்ககம் நடத்தி உள்ளது.  இது 2011 ஆம் வருடத்திய கணக்கெடுப்பாகும்.  அதன் முடிவு தற்போது வெளியாகி உள்ளது.

அந்த கணக்கெடுப்பின் படி கர்நாடக மாநிலமான பெங்களூருவில் அதிக மொழிகள் பேசப்படுகின்றன.  பெங்களூருவில் அலுவல் மொழிகளாக உள்ள 27 மொழிகள் உட்பட மொத்தம் 107 மொழிகள் பேசப்பட்டு வருகின்றன.

இதில் கன்னடம் 44.5%, தமிழ் 15%, தெலுங்கு 14%, உருது 12% மக்களால் பேசப்படுகிறது.  மேலும் இந்தி மொழி 6%  மற்றும் மலையாளம் 3% பேரால் பேசப்படுகிறது.

கர்நாடகாவுக்கு அடுத்தபடியாக நாகாலாந்து, அசாம், மேற்கு வங்கம், மேகாலயா, டில்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் உள்ளன.