சென்னை,
நாளை நாடு முழுவதும் நீட் நுழைவு தேர்வு நடைபெற இருக்கிறது. இதில் பங்குபெறும் மாணவிகள் சேலை அணியக்கூடாது என்றும் ஆனால் ஜீன்ஸ், லெக்கிங்ஸ் போன்ற உடைகள் அணியலாம் என்று அறிவித்துள்ளது.
இது கலாச்சார பாதுகாவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மோடி ஆட்சிக்குவந்த பிறகு இந்தியாவின் பாரம்பரியம் காக்கப்படுவதாக பாரதியஜனதா கட்சியினர் வாய்ச்சவாடால் விடுத்து வருகின்றனர்.
நமது நாட்டின் பாரம்பரிய உணவுகள், பழக்கவழக்கங்களை கடை பிடியுங்கள், பசுக்களை வணங்குங்கள் என்று பல்வேறு வகையான அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில் நாளை நடைபெற இருக்கும் மருத்துவக்கல்விக்கான நுழைவு தேர்வு எழுதும் மாணவிகள் இந்தியாவின் கலாச்சார உடையான சேலை அணிந்து வர தடை விதித்துள்ளது.
ஆனால், வெளிநாடு உடைகளான ஜீன்ஸ் பேன்ட், லெக்கிங்ஸ் அணிய தடை இல்லை என்று கூறியுள்ளது.
பல்வேறு கல்லூரிகளில் பெண்கள் ஜீன்ஸ் பேன்ட், லெக்கிங்ஸ் அணிய தடை விதித்துள்ள நிலையிலும், பாரதியஜனதா அமைச்சர்களே இதுபோன்ற உடைகள் பெண்களை அணிவதை தவிர்க்க வேண்டும என்று கண்டித்துள்ள நிலையில் சிபிஎஸ்இ-ன் இந்த அறிவிப்பு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சிபிஎஸ்இ-ன் இதுபோன்ற அறிவிப்புகள் மத்திய அரசுக்கு தெரியுமா?
ஒரு சாதாரண தேர்வு எழுத இத்தனை கெடுபிடிகள் தேவையா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.