ஜம்மு:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரை சேர்ந்த 12 வயது சிறுவனை, இந்திய எல்லைக்குள் ஊடுருவியதாக இந்திய ராணுவம் கைது செய்துள்ளது.

அந்த பகுதியில் இருந்து பயங்கரவாதிகள், இந்திய பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவதும் வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து இந்திய கட்டுப்பாட்டு எல்லைக்குள் ராஜூரி பகுதி வழியாக  அசஃப்க் அலி சவுகான் என்ற 12 வயது சிறுவன் ஊடுருவினார்.

இதைக் கவனித்த ராணுவ வீரர்கள், அந்த சிறுவனை எச்சரித்துள்ளனர்.
இந்திய வீரர்களை பார்த்தவுடன், அச் சிறுவன்,  கைகளை உயர்த்தியபடி சரணடைந்தார்.

அவரை இந்திய ராணுவத்தினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுவனின் தந்தை பாகிஸ்தான் ராணுவத்தில் பணி புரந்தவர் என்பது தெரியவந்தது.  அந்த சிறுவனை தீவிரவாதிகள் யாரேனும் உளவு பார்க்க அனுப்பியிருக்கலாம் என்று இந்திய ராணுவம் சந்தேகிக்கிறது. இதையடுத்து சிறுவனிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.

\