டிக்டாக் வீடியோக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடை: உயர்நீதி மன்றம் அதிரடி

Must read

மதுரை:

மூக சீரழிவுகளை ஏற்படுத்தி வரும், டிக் டாக் வீடியோக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

பாடல்கள் பாட விரும்புபவகர்ளின் ஆசையை விளம்பரப்படுத்தும் நோக்கிலும், அவர்களை உற்சாகப்படுத்தவும்  டிக்டாக் எனப்படும் மியூசிக்கல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் நன்றாக போய்க்கொண்டிருந்த நிலையில், ஒருசிலரின் அதீத அசை மற்றும் வல்கரான சிந்தனை காரணமாக,  பாட்டு என்ற அவறுவறுப்பான அங்க அசைவுகளை பதிவேற்றி துஷ்பிரயோகத்துக்கும்  பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.

இதையடுத்து,  டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று உலகம் முழுவதும் குரல் எழுந்தது.  தமிழகத்திலும் குரல் எழுப்பட்டது. அதையடுத்து டிக்டாக் செயலி நிர்வாகம் பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் மதுரை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது.

விசாரணையை தொடர்ந்து, விடியோ என்ற பெயரில் டிக் டாக் செயலி மூலம் வீடியோக்கள் எடுக்கவும், அதனை தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் தடை விதிக்கப்படுவதாக நீதி மன்றம் அதிரடியாக அறிவித்து உள்ளது.

More articles

1 COMMENT

Latest article