ஆபாசப் படங்களைப் பார்க்காதீர்!: பி.ஜே. அறிக்கை

திருமணம் ஆன பெண் ஒருத்தரோட,  தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமா அத் நிறுவன தலைவர் பீஜே (பி. ஜைனுலாபுதீன்)  பேசறதா..  ஒரு ஆபாச ஆடியோ சமூகவலைதளங்கள்ல பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருதி. நெட்டிசன்கள் எல்லோரும் இது பத்தித்தான் பதிவிட்டுகிட்டு இருக்காங்க.

“பிஜே புகழைக் கெடுக்க யாரோ மிமிக்ரி செய்திருக்காங்க”ன்னு  அவரோட தரப்பு சொல்லுது. அதே நேரம், “அரை மணி நேரம் யாருமே மிமிக்ரி செய்ய முடியாது”ன்னு ஒரு விமர்சனமும் எழுப்பப்படுது.

வாழற முறை பத்தி பீஜே எம்புட்டெல்லாம் பேசியிருக்காரு.. அவர் மேலயே அபாண்டமானு மனசு வலிச்சுப்போச்சு. அவரோட பழைய அறிக்கை ஒண்ணை தேடி எடுத்தேன். 2013ம் வருசம் அவரு வெளியிட்டது.

படிச்சிப்பாருங்க..

 

“ இன்டர்நெட் ஆபாசங்களால் சிறார்கள் சீரழிவது போதாதென்று பலரது குடும்ப வாழ்வும் சீரழிந்து வருகின்றது.

ஆபாசப் படங்களைப் பார்ப்போரால் படுக்கையறையில் சிறப்பாக செயல்பட முடியாது என்று ஒரு ஆய்வு எச்சரிக்கிறது. ஆண்கள்தான் பெருமளவில் ஆபாசப் படங்களை அதிகம் பார்க்கின்றனர். பெண்களிலும் ஆபாசப் படம் பார்ப்போர் உண்டு. அவர்களின் எண்ணிக்கை குறைவுதான்.

இப்படி ஆபாசப் படம் பார்க்கும், குறிப்பாக இன்டர்நெட்டில் ஆபாசப் படங்களை அடிக்கடி பார்ப்போரால், படுக்கை அறையில் நிஜமான உடலுறவு நடவடிக்கையில் முழுமையாக செயல்பட முடியாமல் போகின்றது என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளனர். ஆபாசப் படங்களை பார்ப்போர் பல பிரச்சினைகளுக்கு ஆளாவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

வீடியோவில் ஆபாசப் படங்களை பார்ப்பதில் இருக்கும் ஆர்வத்தில் பாதியளவு கூட ஆண்களால் படுக்கை அறையில் காட்ட முடிவதில்லை.

இதற்கு முக்கியக் காரணம், மூளையின் உற்சாக மையத்தை தூண்டி விடக் கூடிய ஹார்மோனான, டோபமைன் அபரிமிதமான அளவில் சுரப்பதே ஆகும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

அடிக்கடி ஆபாசப் படங்களைப் பார்த்து உணர்ச்சிவசப்படுவோருக்கு டோபமைன் அதிக அளவில் சுரந்து, சுரந்து கடைசியில், உண்மையான இன்பத்தை அனுபவிக்க நேரிடும்போது அதனால் பலன் இல்லாமல் போய் விடுகிறது என்று அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

இப்படி ஆபாசப் படம் பார்த்து உண்மையான உற்சாகத்தையும், இன்பத்தையும் தொலைத்து நிற்கும் பலரும் தற்போது இது குறித்த கவுன்சிலிங்கிற்கு அதிக அளவில் வர ஆரம்பித்துள்ளனர் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து செக்ஸாலஜிஸ்ட் ஒருவர் கூறுகையில், ஆபாசப் படம் பார்ப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடிதான் உள்ளது. இன்டர்நெட் மூலம் ஆபாசப் படம் பார்ப்போர் பெருமளவில் பெருகி விட்டனர்.

இதனால் உண்மையான செக்ஸ் நடவடிக்கைகளில்
இவர்களால் ஈடுபடுவதில் பல சிரமங்களைச் சந்திக்கின்றனர்.

அதிக அளவிலான செக்ஸ் நடவடிக்கைகளைப் பார்த்துப் பார்த்து இவர்கள் மன ரீதியாக களைத்துப் போய் விடுகின்றனர். அதில் ஒரு சலிப்பும், அலுப்பும் வந்து விடுகிறது. டோபமைன்தான் இதற்கு முக்கியக் காரணம் என்கிறார்.

இப்படிப்பட்ட செக்ஸ் பட அடிமைகள், படிப்படியாக ஆபாசப் படம் பார்ப்பதை நிறுத்திக் கொள்வது நல்லது. இல்லாவிட்டால் இல்லற வாழ்வை இழந்து தவிக்க நேரிடும் என்று அவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.

மேற்கண்ட ஆய்வு முடிவை உண்மைப்படுத்தும் விதமான ஒரு வழக்கு சென்ற மாதம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்தது.

அந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விபரம் பின்வருமாறு :
ஆபாசப் படம் பார்த்ததால் வந்த கேடு!
எழும்பூரைச் சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினியர் ஒருவருக்கு 25 வயதுப் பெண்ணுடன் திருமணம் செய்துவிக்கப்பட்டது. 2007ஆம் ஆண்டு இந்தத் திருமணம் நடைபெற்றது.

2 ஆண்டுகள் குடும்பம் நடத்திய பிறகு 2009ஆம் ஆண்டு கணவர் சென்னை குடும்ப நலக் கோர்ட்டில் தன் மனைவிக்கு உடலுறவில் நாட்டம் இல்லை; எனவே எனக்கு அவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று மனு செய்திருந்தார்.

ஆனால் மனைவியும் ஒரு விவாகரத்து மனு செய்தார். அதில் அவர், “தன் கணவர் ஆண்மையற்றவர்; தங்கள் இருவருக்கும் உடலுறவே நடக்கவில்லை; எனவே தனக்கு விவாகரத்து வேண்டும்” என்றும் தனியாக மனுச் செய்தார்.

பிறகு நீதிபதி தம்பதியினரை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இருவரும் உறவு வைத்துக் கொள்ள உடல் ரீதியாக எந்த விதத் தடையுமில்லை என்று மருத்துவர்கள் அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதைத் தொடர்ந்து கவுன்சிலிங் முறையில் பிரச்சனையை அறிய தம்பதியினர் உளவியல் நிபுணரிடம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
உளவியல் நிபுணர்கள் இருவரையும் தனித்தனியாக, சேர்ந்து என்று பலநாட்கள் கவுன்சிலிங் நடத்தியதில் தெரியவந்த உண்மை வேறுவிதமாக இருந்துள்ளது.

கணவர் இயற்கைக்கு மாறாக நடந்துகொள்ள வற்புறுத்துவதாகவும், ஆபாச வீடியோக்களை தினமும் பார்ப்பதாகவும் மனைவி கூறினார்.

இதனையடுத்து கணவரும் தனது ஆபாசப் பட ஆர்வத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் தன் மனைவியிடம் இயற்கையான முறையில் உறவுகொள்ள நாட்டமில்லை என்றும், தன்னால் உறவு கொள்ள இயலவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார் கணவர்.

இதையே உளவியல் நிபுணர்கள் அறிக்கையாகத் தயாரித்து, “இப்படி ஒருவர் ஆபாசப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தால் இயற்கையான உறவில் அவர்களுக்கு நாட்டமில்லாது போய்விடும்; இந்தக் கேசிலும் இதுதான் நிலைமை” என்று அறிக்கை தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இதனையடுத்து கணவர் தொடர்ந்த விவாகரத்து வழக்கை தள்ளுபடி செய்த குடும்ப நல கோர்ட், மனைவியின் விவாகரத்து மனுவை ஏற்று விவாகரத்து வழங்கியது.

ஆபாசப் படங்களைப் பார்ப்பதால் இத்தகைய விளைவுகள் ஏற்பட்டு கடைசியில் உடலுறவிலேயே நாட்டமில்லாத அளவிற்குச் சென்று ஆண்மையை இழந்து நிற்கும் இந்த இழிநிலை தேவைதானா என்பதை ஆபாசப் படம் பார்ப்போர் சிந்திக்க வேண்டும்.

இப்படி ஆண்மையற்ற கணவன்கள் அதிகரிக்கும்போது அவர்களது மனைவிமார்கள் தங்களுக்கு வேறு வடிகாலின்றி விபச்சாரத்தின் பக்கம் தள்ளப்படுகின்றனர். விபச்சாரத்தின் பக்கம் செல்ல வழியில்லாத பெண்கள் தங்களது கணவனின் கதையை முடிப்பதற்கும் இதுதான் காரணமாக உள்ளது.

இதனால் விபச்சாரமும், கொலைகளும் பெருகுகின்றன.
கள்ளக்காதல்களும், அதனால் ஏற்படும் கொலைகளுக்கும் இந்த ஆபாசப் படங்கள்தான் காரணமாக உள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆபாசப் படம் பார்த்தால் மட்டுமல்ல; அறைகுறை ஆடை அணிந்த பெண்களைப் பார்ப்பதும் ஆபத்து!

ஆபாசப் படங்களை பார்ப்பது மட்டும்தான் ஆண்மைக்குறைவுக்கு காரணம் என்று நாம் விளங்கிக் கொள்ளக்கூடாது.

அறைகுறையாக கவர்ச்சியாக ஆடை அணிந்து செல்லும் பெண்களைப் பார்ப்பதும் கூட ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட்டு உடலுறவில் நாட்டமில்லாமல் செய்துவிடும் என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.

பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது.

அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்தப் புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் இதுகுறித்து கூறுகையில், நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்.
இப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கிறதாம்.

அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் மிகவும் குறைவு.
முதலில் இதற்கு கால நிலையும், உணவுப் பழக்கவழக்கங்களே காரணம் என கருதப்பட்டது. ஆனால் அதே காலநிலை, உணவுப் பழக்கத்தில் மேலை நாட்டினரால் அரேபிய ஆண்களைப் போல இருக்க முடியவில்லை. இது ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் குழப்பியிருக்கிறது. அந்தக் குழப்பம் அவர்களுடைய கவனத்தை பிற காரணிகளின் மேல் திரும்பியிருக்கிறது

உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால் இதற்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் யோசனை முளைத்திருக்கிறது.

அதன் பின்பே பெண்களின் ஆடைக்கும் ஆண்களின் ஆரோக்கியத்துக்கும் இடையேயான இந்தத் தொடர்பு தெரியவந்திருக்கிறது. தெருவிலும், பணித்தளங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் உடைகள் மறைக்காத உடலின் பாகங்களால் ஆண்களின் தூண்டப்படும் பாலியல் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது.

முக்கால்வாசி ஆண்மைக்குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.
நாங்கள் ஆபாச ஆடை அணிந்தால் உங்களுக்கென்ன? என்று வெட்டி நியாயம்பேசும் பெண்கள் மேற்கண்ட செய்தியை கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிறபெண்கள் அணிந்து செல்லும் ஆபாச ஆடைகளையும், கவர்ச்சிக் காட்சிகளையும் உங்கள் வீட்டு ஆண்கள் உற்றுநோக்கினால் அதனால் ஆண்மைக்குறைவு ஏற்பட்டு, இல்லற வாழ்வை இழந்து அவதிப்பட்டு, அதனால் பாதிக்கப்படுபவர்கள் வெட்டி நியாயம் பேசும் இந்தப் பெண்கள்தான் என்பதை இவர்களுக்கு நினைவுபடுத்திக் கொள்கின்றோம்.

(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்குர் ஆன் 24 : 30

செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.
அல்குர் ஆன் 17 : 36 ” – எவ்ளோ அருமையா கருத்து சொல்லியிருக்காரு இந்த பீஜே மனுசன்!

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Do not see porn videos!: PJ, ஆபாசப் படங்களைப் பார்க்காதீர்!: பி.ஜே. அறிக்கை
-=-