சென்னை: தமிழ்நாட்டில், 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், கல்விக் கட்டணத்திற்காக ஹால் டிக்கெட் தர மறுக்கக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிளஸ் 2 தேர்வு மே 5ந்தேதி தொடங்குகிறது. பத்தாம் வகுப்பு தேர்வு மே 6ந்தேதியும், பிளஸ் 1 வகுப்புக்கு மே 10-ஆம் தேதியும் தொடங்க உள்ளன. ஏற்கனவே பிராக்டிக்கல் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இன்றுடன் முடிவடைகிறது
இந்த நிலையில், சில தனியாா் பள்ளிகளில், கல்விக் கட்டண நிலுவை காரணமாக, சம்பந்தப்பட்ட மாணவா்கள் தோ்வில் பங்கேற்க முடியாதவாறு தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை தராமல் நிறுத்தி வைப்பதாக புகாா்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் எச்சரிக்கை செய்துள்ளார்.
இதுதொடர்பாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ள அறிக்கையில், மாணாக்கர்கள் கல்விக் கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு வழங்க பள்ளிகள் மறுக்கக்கூடாது. நுழைவுச் சீட்டு வழங்க மறுத்தால், சமந்தப்பட்ட பள்ளி நிர்வாகமே பொறுப்பேற்க நேரிடும் எனத் தெரிவித்துள்ளார். வழங்காமல் நிறுத்தி வைத்தால், அதற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு ஏற்க நேரிடம் என்றும்,