ஃபிரிட்ஜை என்பது உடனடியாகக் கெட்டுப்போகும் பொருட்களைப் பதப்படுத்தி, கெட்டுப் போகாமல் வைத்திருக்கத்தான். ஆனால் ஃபிரிட்ஜை நம்மில் பெரும்பாலானோர் சமையலறையில் இருக்கும் ஸ்டோர் ரூம் என்று எண்ணிக் கொண்டு, வாங்கும் எல்லா பொருட்களையும் அதில் போட்டு அடைத்த வைத்திருக்கிறோம். சில பொருட்களை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தக்கூடாது.
அவை தன்னுடைய இயல்பையும் சத்துக்களையும் இழந்துவிடும். அப்படி என்னென்ன பொருட்களை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தக்கூடாது?
சில உணவுப்பெருட்களை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தினால் அவை தன்னுடைய சத்துக்களை முழுமையாக இழந்துவிடும். அதேபோல் தன்னுடைய இயல்புத் தன்மை நீங்கி, எதிர்மறையான விளைவுகளைக்கூட சில சமயங்களில் உண்டாக்கிவிடும்.
ஆலிவ் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்றவை மிகக் குறைந்த வெப்பநிலையில் உறையத் தொடங்கிவிடும். அதனால் ஆயிலை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தக்கூடாது.
சிலர் காபி டிக்காஷனைப் போட்டு ஃபிரிட்ஜி்ல் வைத்து, தேவையான நேரங்களில் பயன்படுத்துகிறார்கள். அது முற்றிலும் தவறு. அப்படி வைக்கும்பொழுது மிக எளிதாக பூஞ்சை படர ஆரம்பித்துவிடும். அது மற்ற பொருட்களையும் தாக்க ஆரம்பித்துவிடும்.
தக்காளி நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருள் என்பதால் தக்காளியை ஃபிரிட்ஜில் சேர்த்து வைக்கிறோம். ஆனால் தக்காளியை மிகக் குறைந்த வெப்பநிலையில் வைத்திருக்கக் கூடாது.
ஏற்கனவே வெட்டிய வெங்காயத்தையே வைத்திருந்துப் பயன்படுத்தக்கூடாது. அதிலும் வெட்டிய வெங்காயத்தை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துவது மிகக் கேடு. வெங்காயத்தில் விஷத்தன்மை அதிகரித்துவிடும்.
உருளைக்கிழங்கை பிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தும் போது அவற்றில் இருக்கும் ஸ்டார்ச் முற்றிலும் உறிஞ்சப்படுகிறது.
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஒரிஜினல் தேன் கெட்டுப் போகவே செய்யாது. விரைவாகக் கெடக்கூடிய பொருட்களைத் தான் ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்த வேண்டும்.
இதேபோல் பூண்டு, வாட்டர்மெலன் போன்ற நீர்ப்பழங்கள், அவகேடோ, வாழைப்பழம், பிரெட் ஆகியவற்றை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துதல் கூடவே கூடாது.