சென்னை:
மே 4ந்தேதி முதல் தமிழகத்தில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தனிக்கடைகள் திறக்கலாம் என அனுமதி வழங்கி உள்ள தமிழக அரசு, டாஸ்மாக் கடைகள் மே 17ந்தேதிக்கு பிறகே திறக்கும் என்று தெரிவித்து உள்ளது. இது ‘குடி’ மகன்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்று தமிழக அமைச்சரவைகூட்டத்தைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது.
அதன்படி, அழகு நிலையங்கள் மற்றும் சலூன் கடைகள் தவிர, ஹார்டுவேர், கட்டுமான பொருட்கள், சிமென்ட், செல்போன் கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், குடிமகன்களின் முக்கிய தேவையான டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறப்பதில் எடப்பாடி அரசு தளர்வு அறிவிக்கவில்லை. மே 17ந்தேதி வரை டாஸ்மாக் கடை திறக்கப்படாது என்று தெரிவித்து உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து மூட வேண்டும் என பெரும்பாலான அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் மே மாதம் 17ஆம் தேதி வரை டாஸ்மாக் திறக்கபடாது. அதன்பிறகு திறக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படும் என்று தமிழகஅரசு அறிவித்து உள்ளது.