தஞ்சை:
டெல்டா மாவட்டத்துக்காக இன்று திறக்கப்படும் காவிரி நீரை குடித்தால் நோய்த்தொற்று ஏற்படும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட விவசாய பாசனத்துக்காக இன்று காலை 11 மணிக்கு கல்லணை திறக்கப்படுகிறது. இதனால் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் உட்பட ஆறுகளில் நீர் பெருக்கு ஏற்படும்.
இந்த நீரை குடிக்க வேண்டாம் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். இந் நீரை குடித்தால் நோய்த்தொற்று ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். இந்த நீரில் குளிக்கவும் வேண்டாம் என்றும் கோரியுள்ளார்.