டிகர் சிவாஜி கணேசனுக்கு சொந்தமான சாந்தி தியேட்டர் சென்னையில் புகழ் பெற்று விளங்கியது.  அண்ணா சாலையில் இருந்த இந்த தியேட்டரை இடித்துவிட்டு, அக்ஷயா நிறுவத்துடன் இணைந்து “மால்” அமைக்க, சிவாஜி கணேசனின் மகன் பிரபு  திட்டமிட்டார்.
இங்கு தியேட்டர் மற்றும் கடைகள், பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த ஷாப்பிங் மால் அமைக்கும் பணி நடந்துவருகிறது. இந்த வளாகத்தின் பின்புறம்  எல்லிஸ்புரம் உள்ளது.  சுமார் 25 ஆண்டுகளுக்கு முன், இங்கு தமிழக அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தந்தது. இங்கு இங்கு நூற்றுக்கணக்கான மக்கள், வசிக்கின்றனர்.
1
இந்த கட்டிங்களை, குடிசை மாற்று வாரிய நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், வீடுகளின் சுவர்களின் விரிசல் ஏற்பட்டுள்ளது. தவிர, மேற்கூரைகள், படிக்கட்டுகள், கைப்பிடி சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன.
இந்த வீடுகளை சீரமைத்துத் தர மக்கள் கோரியும் இதுவரை அரசு நடவடிகைக ஏதும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் சாந்தி தியேட்டர் கட்டிடத்தை இடிக்கும் பணி கடந்த மூன்று  நாட்களுக்கு முன் துவங்கியது. அப்போது, பொக்லைன் இயந்திரம் மூலம் கட்டிடங்களை இடிக்கத் துவங்கினர். அதனால் ஏற்பட்ட அதிர்வினால், எல்லீஸ்புரம் குடிசை மாற்று வாரிய கட்டிசங்கள் குலுங்கின.
இதனால், பூகம்பம் ஏற்பட்டுவிட்டதோ பயந்துபோன மக்கள், அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறினர். பிறகு சாந்தி வளாகத்தில் நடக்கும் கட்டிடபணிகளால் அதிர்வு ஏற்பட்டது தெரியவந்தது.
உடனே அங்கு நூற்றுக்கும் மேற்றோடர் சென்று, இடிக்கும் பணியில்  ஈடுபட்டவர்களை முற்றுகையிட்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து திருவல்லிக்கேணி போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, அவர்களை சமாதானப்படுத்தினர்.  கட்டிடம் இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
“பழைய கட்டிடங்களை இடிக்க எத்தனையோ நவீன முறைகள் வந்துவிட்டன. அருகில் இருக்கும் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படாதடி இடிக்கும் பணியை தொடர வேண்டும். எங்கள் வீடுகள் இடிவதற்கு பிரபு காரணமாகிவிடக்கூடாது” என்று சாந்தி திரையரங்க உரிமையாளரான நடிகர் பிரபுவுக்கு அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
.