
சென்னை,
தமிழகத்தில் உயிரோடு இருப்பவர்களின் படங்கள் உள்ள பேனர்கள் வைக்ககூடாது என சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்ட நிலையில், தற்போது சிக்னல்களிலும் பேனர்கள் வைக்ககூடாது என உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து சிக்னல்களில் உள்ள விளம்பர பேனர்களால் விபத்துக்கள் ஏற்படுவதாக கோவையை சேர்ந்த நுகர்வோர் மையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. விளம்பர பேனர்களால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பேனர்களை வைக்க தடை விதித்து உத்தரவிட்டது.
ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தால் அதற்கான காலம் முடிந்தவுடன், அனுமதியை புதுப்பிக்கக் கூடாது எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]