சென்னை:
தமிழகத்தில் குஜராத் மாடலை அனுமதிக்காதீர்கள் என்று குஜராத் எல்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் பட்டியலினத்தவர் பிரிவின் சார்பாக எழுதப்பட்டுள்ள ‘தலித் உண்மைகள்’ என்ற புத்தகத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் செல்வப்பெருந்தகை, குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி, தமிழகத்தில் பாஜக காலூன்ற வேகமாக செயல்படுகிறது என்றும், தமிழகத்தில் குஜராத் மாடலை அனுமதிக்காதீர்கள் என்றும், தமிழகத்திற்கு சாவர்கார் தேவையில்லை, பெரியாரை கொண்டாடுங்கள் என்றும் கூறினார்.