டெல்லி: பாலியல் வழக்குகள் தொடர்பான கருணை மனுக்களில் இருந்து விலகி இருங்கள் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறி இருக்கிறார்.
தெலுங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். எதிர்பாராத விதமாக அவர்கள் 4 பேரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.
நாடு முழுவதும் இந்த சம்பவத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்து வருகிறது. இந் நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாலியில் வழக்குகள் தொடர்பான கருணை மனுக்களில் இருந்து விலகி இருங்கள் என்று கூறியிருக்கிறார்.
அது போன்ற கருணை மனுக்கள், அதன் முடிவுகளில் இருந்து தள்ளி இருக்க விரும்புவதாக கூறியிருக்கிறார். தெலுங்கானா என்கவுன்ட்டர் சமயத்தில் அவர் கூறியிருக்கும் இந்த கருத்து முக்கியமாக பார்க்கப்படுகிறது.