டில்லி:
தேசிய மற்றும் மாநில அளவில் டிஎன்ஏ டேட்டா வங்கிகளை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் சேகரிக்கப்படும் தகவல்களை கசியவிடும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கும் வகையிலான சட்டமசோதாவை மத்திய சட்ட அமைச்சகம் தயாரித்து வருகிறது.

‘‘டிஎன்ஏ டேட்டாக்களுடன் டிஎன்ஏ ப்ரோஃபைலும் பராமரிக்கப்படும். இந்த தகவல்கள் அனைத்து ஒரு நபரை அடையாளம் காணுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும். பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகள், சந்தேக நபர்கள், வழக்கு விசாரணையில் உள்ளவர்கள், மாயமானவர்கள், அடையாளம் தெரியாத நபர்களை அடையாளம் காணும் வகையில் இந்த வங்கிகள் தேசிய மற்றும் மாநில அளவில் ஏற்படுத்தப்படுகிறது. இதர பணிகளுக்கு பயன்படுத்தப்படமாட்டாது’’ என்று அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுளளது.
பயோ டெக்னாலனி துறை உதவியுடன் தயாரிக்கப்பட்டு வரும் இந்த சட்டமசோதா இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. ‘‘அடையாளம் தெரியாத ஆயிரகணக்கான உடல்களை அடையாளம் காண உதவும் வகையில் தேசிய அளவில் டிஎன்ஏ டேட்டா தகவல்களை ஏற்படுத்த வேண்டும்’’ என்று தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று பொது நல வழ க்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.
இதன் அடிப்படையில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் மேற்கண்ட தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர், சந்திரசுத் ஆகியார் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு இந்த விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]