ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது, அதனுடன் சொல்லதை மட்டுமில்ல, சொல்லாததையும் இந்த ஸ்டாலின் செய்வான் என்றவர், திமுகவின் அடித்தளம், குருகுலம் ஈரோடுதான் என்றார்.

அப்போது,  திமுகவின் அடித்தளமே ஈரோடுதான்; கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் குருகுலமாக இருந்தது ஈரோடு என்றவர், மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை குறித்து வர இருக்கும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்றார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக காங்கிரஸின் ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பிரசாரத்தின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார்.

ஈரோடு சம்பத் நகரில் தனது பிரசாரத்தை தொடங்கிய முதலமைச்சர், சம்பத் நகரில், ஈ.வி.கே.எஸ். சம்பத் மகனுக்கு வாக்கு சேகரித்து கலைஞர் மகன் வந்துள்ளேன் என்றவர், திமுகவின் அடித்தளமே ஈரோடுதான்; கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் குருகுலமாக இருந்தது ஈரோடு என்றார்.

மேலும், , மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை குறித்து வர இருக்கும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்றவர், தமிழகத்திற்கு நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலகு பெற்று தருவதே தனது லட்சியம் என்றும் என்றும் கூறி வாக்கு சேகரித்தார்.

“ தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்றும், ஆட்சிக்கு வரும்போது இதையெல்லாம் எங்களுக்கு செய்து தர வேண்டும் என்றும், தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகள், உறுதிமொழிகள் அதையெல்லாம் நிறைவேற்றித் தர வேண்டும் என்று நீங்கள் வாக்களித்தீர்கள், நீங்கள் நம்பிக்கையுடன் உள்ளீர்கள்.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இந்த 2 ஆண்டுகாலத்தில் செய்த சாதனைகளை சொல்ல வேண்டுமென்றால் மிகப்பெரிய பட்டியலை எடுத்துச்சொல்ல வேண்டும். அதில் சிலவற்றை மட்டும் ஆதாரத்துடன் கூறுகிறேன். தி.மு.க.வைப் பொறுத்தவரை கலைஞர் 5 முறை ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். ஒவ்வொரு முறையும் தேர்தல் அறிக்கையை அவர் வெளியிடுவார். அப்படி வெளியிடும்போது தேர்தல் அறிக்கையை தலைப்புச்செய்தியாக 2 வரியில் வெளியிடுவார்.

சொன்னதைச் செய்வோம். செய்வதை சொல்வோம் என்பர். அதைத்தான் நான் இங்கு வழிமொழிகிறேன். அதனுடன் சொல்லதை மட்டுமில்ல, சொல்லாததையும் இந்த ஸ்டாலின் செய்வான் என்பதை உங்களிடம் என்னால் காட்ட முடியும். மகளிருக்கு இலவச பேருந்து. ஆட்சிக்கு வந்து நான் போட்ட 5 கையெழுத்துகளில் மகளிர் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யலாம் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இன்று மகளிர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக கல்லூரிகளுக்கும், அலுவலகத்திற்கும், உறவினர்கள் வீட்டிற்கும் செல்கின்றனர். இந்த காசை மிச்சப்படுத்தி குடும்பத்திற்கு வேறு செலவு செய்கின்றனர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த திட்டம் கிடையாது.

மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களுக்காக மதிய உணவுத்திட்டம் இருந்தாலும், காலையில் அவர்கள் உணவு அருந்தாமல் வரும் கொடுமைகளை பள்ளிகளில் ஆய்வு செய்ய செல்லும்போது கண்டேன். பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளும்போது ஒரு மாணவனிடம் ஏன் தம்பி சோர்வாக இருக்கிறாய்? என்று கேட்டபோது, அந்த மாணவன் ஐயா நான் காலையில் சாப்பிடாம வந்தேன் என்றான். பல மாணவர்களை விசாரித்தபோது 80 சதவீத மாணவர்கள் எந்த சாப்பாடும் காலையில் சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.  உடனடியாக காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிவித்து முதலமைச்சர் காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறோம். காலை உணவு வழங்கும் திட்டம் என்பது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது. தமிழ்நாட்டில் மட்டும்தான் நிறைவேற்றப்படுகிறது.”

இவ்வாறு அவர் பேசினார்.

முதலமைச்சருடன் பிரசார வாகனத்தில் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவனும் இடம்பெற்றிருந்தார்.