சென்னை: திமுகவின் குடும்ப ஆட்சி 2026ல் அகற்றப்படும் நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக்கழகம் தெரிவித்து உள்ளது. 1970களில் ஆண்டு இந்த குடும்ப ஆட்சியை எம்ஜிஆர் அகற்றினார். 2026ல் விஜய் அகற்றுவார்எ ன தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், புதிது புதிதாகக் கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என நினைப்பதாக தவெக விமர்சித்திருந்தார். இதற்கு தவெக கட்சியின் செய்தித்தொடர்பாளர் பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கியுள்ள நிலையில், இக்கட்சியின் முதல் மாநாடு கடந்த அக். 27ம் தேதி விழுப்புரத்தில் நடந்தது. இந்த மாநாட்டில் விஜய் பேசும் போது திமுக குறித்து கடும் விமர்சனங்களைக் கூறியிருந்தார். தங்கள் கட்சியின் சித்தாந்த எதிரி பாஜக என்றும் அரசியல் எதிரி திமுக என்பது போல விஜய் பேசியிருந்தார்.
மக்கள் விரோத ஆட்சியைத் திராவிட மாடல் ஆட்சி எனக் கூறி ஏமாற்றுகின்றனர்.. எங்கள் கட்சி வண்ணம் தவிர வேறு கலரை எங்கள் மீது பூச முடியாது.. திராவிட மாடல் என்ற பெயரில் தமிழ்நாட்டைச் சுரண்டும் குடும்ப சுயநல அரசியல்வாதிகள் என்று கடுமையாகவே விமர்சித்து இருந்தார். இதற்கு திமுகவினர் பலரும் பதிலடி கொடுத்தனர். அதேநேரம் டாப் தலைவர்கள் யாரும் நேரடியாக இதில் பதில் தரவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் விஜய் கட்சியின் கொள்கைகள் குறித்த கடுமையான வன்மங்கள் வெளிப்பட்டன. இதைத்தொடர்ந்து திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் தவெக குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று (நவம்பர் 4ந்தேதி) முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான, சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் மறைமுகமாக விஜய்யை மறைமுகமாக சாடியிருந்தார். அப்போது, ல், “திமுக அரசு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இது சிலருக்குப் பிடிக்கவில்லை. இன்று வருபவன் எல்லாம், புதிது புதிதாகக் கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும், ஒழியவேண்டும் என்று பேசி வருகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் தேவையில்லாமல் பதில் சொல்ல வேண்டிய தேவையும் அவசியமும் எங்களுக்கு இல்லை. பதில் சொல்லி நேரத்தை வீணடிக்கவும் விரும்பவில்லை. அண்ணா பாணியில் சொல்கிறேன்.. வாழ்க வசவாளர்கள். பொதுமக்கள் எந்த நம்பிக்கையில் இந்த ஆட்சியை எங்களிடம் ஒப்படைத்தார்களோ அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவோம்” எனப் பேசியிருந்தார்.
முதல்வரின் விமர்சனம் சமூக வலைதளங்களில் வைரலானது. விஜய்யை தான் முதல்வர் ஸ்டாலின்விமர்சிப்பதாகப் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழகத்தின் செய்தி தொடர்பாளர் வீர விக்னேஷ்வரன் பதிலடி கொடுத்துள்ளார். “தமிழ்நாட்டில் உள்ள அனைவருமே விஜய்யை தங்கள் சகோதரனாக மகனாக குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கிறார். அந்தளவுக்கு நெருங்கிய உறவையும் அதீத அன்பை வைத்துள்ளனர்.
அப்படியிருக்கும் போது முதல்வர் ஸ்டாலின் எங்கள் தலைவரைத் தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சித்து இருக்கிறார். இது துரதிஷ்டவசமானது. அரசியல் எதிரிகளுக்கு இதுபோல பதில் கொடுப்பது சரியான போக்கு இல்லை.
தமிழ்நாட்டில் தங்கள் குடும்ப ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அரசியல் எதிரிகளைத் தரக்குறைவாகப் பேசுவது திமுகவின் டிஎனஏவிலேயே இருக்கிறது. முதல்வரின் பேச்சும் அதைத்தான் காட்டுகிறது.
1970களில் ஆண்டு இந்த குடும்ப ஆட்சிக்கு எதிராகவே எம்ஜிஆர் கலகம் செய்தார். இந்த குடும்ப ஆட்சியை அகற்றியும் காட்டினார். அதுபோல வரும் 2026ல் இந்த வரலாறு மீண்டும் திரும்பும். 2026ல் இந்த குடும்ப ஆட்சியைத் துடைத்தெறிந்துவிட்டு, எங்கள் தலைவர் ஒரு ஜனநாயக ஆட்சியை அமைப்பார்” என்றார்.