சென்னை: நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுகவும், காங்கிரஸும் தான்; இப்போது இரட்டை வேடம் போடுகிறது, நீட் தேர்வை ரத்து செய்ய தங்களிடம் ரகசியம் இருப்பதாக கூறிய துணைமுதல்வர் உதயநிதி, அந்த ரகசியத்தை தெரிவிக்காமல் கள்ள மவுனம் சாதிக்கிறார் என்று குற்றம் சாட்டியதுன், பேரவையில் தங்களுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாக சபாநாயர் மீது குற்றம்சாட்டி அவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  கூறினார்.

“தேர்தலின் போது நீட் தேர்வை ரத்து செய்வோம் எனக் கூறி கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, ஆட்சிக்கு வந்த கட்சி திமுக. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பொய் பேசி வாக்கு பெற்ற திமுக கட்சிக்கு, பொதுமக்கள் மரண அடி கொடுப்பார்கள்.” என அதிமுக பொதுச்செயலாளரும்,  எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.  ஏற்கனவே பட்ஜெட்மீதான விவாதம் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.  இன்று பேரவை நிகழ்வுகள் தொடங்கியதும், கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் கூறினர்.

இதைத்தொடர்ந்து, எதிர்க்கட்சியானஅதிமுக சார்பில், தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நிகழும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து விவாதிக்க  சபாநாயகரிடம் அனுமதி கேட்டனர். ஆனால், அதற்கு சபாநாயகர் அப்பாவு, மறுப்பு தெரிவித்ததையடுத்து  அதிமுக எமஎல்ஏக்கள் அமளியில்ஈடுபட்டனர். மக்கள் பிரச்சனை பற்றி பேரவையில் பேசுவதற்கு எதிர்க்கட்சி தலைவர் அனுமதி கேட்டு போராட வேண்டுமா என அ.தி.மு.க.வினர் முழக்கமிட்டனர்.  பின்னர் சபாநாயகரின் எச்சரிக்கை காரணமாக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், எடப்பாடி தலைமையில், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் சட்டமன்ற பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த  எடப்பாடி பழனிசாமி  கூறியதாவது,

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் இருக்கிறது. செய்தியை வெளிப்படுத்தும் அ.தி.மு.க. நிர்வாகிகளை சிறையில் அடைக்கிறீர்கள்.  வீடு புகுந்து ஒரு தாயை தாக்கி கொள்ளையடிப்பவன் அன்றைய தினமே ஜாமினில் வெளிவருவது எப்படி? ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகரான காவல்துறை ஏவல்துறையாக மாறிவிட்டது.

உண்மை நிலையை சட்டசபையில் பேசினால் வெளியே வரும் அல்லவா? * மக்கள் பிரச்சனையில் எந்த பாகுபாடும் காட்டாமல் நாங்கள் குரல் எழுப்பி வருகிறோம்.

சட்டம் ஒழுங்கு தொடர்பாக விவாதிக்க கோரி நாங்கள் கொண்டு வந்த தீர்மானத்தை அவர்கள் (திமுக அரசு)  ஒத்துக் கொள்ளவில்லை. இது தொடர்பாக சட்டப்பேரவை யில் பேச அனுமதி மறுக்கிறார்கள். ஜனநாயக நாட்டில் அனைவரும் சமம். இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. தமிழ்நாடு காவல்துறை ஸ்காட்லாந்து நாட்டு காவல் துறைக்கு இணையாக போற்றப்பட்ட காவல்துறை. ஜனநாயக முறையில் ஒவ்வொரு நபருக்கும் பாதுகாப்பு வேண்டும். ஒரு அரசை மக்கள் எதற்கு தேர்ந்தெடுக்கிறார்கள். அனைவருக்கும் பாதுகாப்பு அவசியம்.

சவுக்கு சங்கர் வீட்டில் அவரது தாயார் தனியாக இருக்கும்போது அத்துமீறி உள்ளே சென்று பொருட்களை எடுத்துச் சென்றதுடன் படுக்கையறை, சமையலறை அனைத்தையும் சேதப்படுத்தி இருக்கிறார்கள், அதோடு கழிவு, மலத்தை வீட்டில் கொட்டியும் வீட்டை மோசமான முறையில் நாசம் செய்து இருக்கிறார்கள்.

அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இப்படி கீழ்த்தரமான செயல் இதுவரை நடந்ததாக வரலாறு இல்லை. இந்தச் சம்பவம் கொடுமையின் உச்சம், அராஜகத்தின் வெளிப்பாடு.

தூய்மை பணியாளர் என்ற போர்வையில் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை, இதற்குப் பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஒரு பிரபலமான ஊடகவியலாளருக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களுக்கு இந்த ஆட்சி என்ன பாதுகாப்பு வழங்க்கும். இங்கே ஆட்சி நடக்கிறதா? இல்லை சர்வாதிகாரம் நடக்கிறதா?. இந்த அரசு எப்படி சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

2021 சட்டமன்ற பொது தேர்தலின் போது ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டப்பேரவை நடக்கும் என தெரிவித்தார்கள். ஆனால் மொத்தமே 119 நாட்கள்தான் நடைபெற்று இருக்கிறது. இது குறித்து நாங்கள் வலியுறுத்திய பிறகு தான், இப்போது 20 நாட்கள் நடத்துகிறார்கள். இல்லையென்றால் இதையும் நடத்த மாட்டார்கள்.

இவர்கள் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா?. நாங்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளித்து பேச வைத்தோம். ஆனால் இவர்கள் அப்படி வாய்ப்பு கொடுக்கவில்லை.

ஒரு இலாக்காவின் பிரச்சினையை எப்படி பத்து நிமிடத்தில் சுருக்கமாக பேச முடியும்?, அதுவும் குறிப்பாக மற்றவர்களுக்கு பேச வாய்ப்பை கொடுக்கப்படவில்லை.

மக்கள் பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் கோரிக்கைகளை முன்வைக்க வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக வாக்குறுதி கொடுத்தது. ஆனால் தற்போது வேறு வழி இல்லை. நாட்டு மக்கள் வெளியே சென்றாலும் கேள்வி கேட்பார்கள். அதற்கு நீட் தேர்வு சம்பந்தமாக அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படும் என அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலை, முதல் கையெழுத்தாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனக் கூறினார்கள். ஆனால் இதுவரை பதிலை கூறவில்லை. 

விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஒரு ரகசியம் உள்ளது என்றார். ஆனால் இதுவரை அந்த ரகசியத்தை வெளியே கூறவில்லை.  கள்ள மவுனம் சாதிக்கிறார். எத்தனை நாட்கள் தான் நாட்டு மக்களை ஏமாற்றுவீர்கள்.‘

நீட் தேர்வு சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என முதல்வர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறினார் மீண்டும் எதற்கு ஒரு முறை சட்டப்பேரவையில் தன்னுடைய கருத்தை பதிவு செய்து மக்களை ஏமாற்றுவதற்காக நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள் தேர்தல் வரும்போது மக்கள் கேள்வி கேட்டார்கள் என்பதற்காக தனது தவறை மறைப்பதற்காக இந்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறார்கள்.

எங்கள் காட்சியிலும் தான் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தீர்மானத்திலும் போராடும் அப்போது எங்களை பல கேள்விகளும் கிண்டல்களையும் செய்தார்கள் நீ தேர்வின் காரணமாக இதுவரை சுமார் 20 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என பொய்யை கூறி கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

தேர்தலின் போது நீட் தேவை ரத்து செய்வோம் எனக் கூறி கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, ஆட்சிக்கு வந்த கட்சி திமுக. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பொய் பேசி வாக்கு பெற்ற திமுக கட்சிக்கு, பொதுமக்கள் மரண அடி கொடுப்பார்கள்.

நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுகவும், காங்கிரஸும் தான். இதற்கு முழுக்க முழுக்க காரணம் 2010-ல் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி தான்.

தற்போது மக்களை ஏமாற்றவே, நீட் விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் இளைஞர்களை ஏமாற்றுவதற்கு திமுக அரசு நடத்தும் நாடகம் தான் அனைத்துக் கட்சி கூட்டம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பது குறித்து பிறகு கூறுவோம் . நீட் தேர்வை ரத்து செய்ய ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.