தூத்துக்குடி:
திமுகவின் செயல்பாடுகள் தான் அதிமுகவின் விமர்சனத்திற்குப் பதிலாக இருக்கும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தீத்தம் பட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சியில் இருக்கும் போது எதையும் செய்யாத அதிமுக, திமுக செய்வதைப் பார்த்துப் பயப்படுகின்றனர் என்றும், அந்த பயத்தின் வெளிப்பாடு காரணமாக திமுக எதையும் செய்யவில்லை என்று அதிமுக கூறுகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுகவின் செயல்பாடுகள் தான் அதிமுகவின் விமர்சனத்திற்குப் பதிலாக இருக்கும் என்று அவர் கூறினார்.
Patrikai.com official YouTube Channel