சென்னை: இந்தியை திணிக்க முயன்றால் அடுத்தக்கட்ட போராட்டம் டெல்லியில் நடத்தப்படும் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் இது எடப்படி ஓபிஎஸ் ஆட்சி அல்ல, முத்துவேல் கருணாநிதியின் மகன் ஆட்சி என்று எச்சரிக்கை செய்தார்.
மத்தியஅரசின் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக இளைஞர் அணி, மாணவர் அணி போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் போராட்டம் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக கட்சியின் இளைஞர் அணி செயலாலர் உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன், திமுக எம்.பி. தயாநிதி மாறன் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், மத்தியஅரசு மற்றும் இந்திக்கு எதிரான முழுக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், இளைஞர் அணி மற்றும் மாணவர் அணிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ” திமுகவின் முக்கியமான கொள்கை இந்தி எதிர்ப்பு, இந்தி திணிப்பை எப்போதும் எதிர்ப்போம். அதிலிருந்து நாங்கள் சற்றும் விலகமாட்டோம், விட்டுக் கொடுக்கமாட்டோம். அது எங்கள் மாநில உரிமை. இப்போது வெறும் ஆர்ப்பாட்டம்தான் நடத்தியிருக்கிறோம். இதை போராட்டமாக மாற்றுவதா வேண்டாமா என்பது உங்கள் கையில்தான் உள்ளது. “மத்திய, ஒன்றிய என்று கூறினால்தான் அவர்களுக்கு கோபம் வரும், அதனால் அப்படியே சொல்வோம். ஒன்றிய பிரதமர் மோடி அவர்களே, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களே, நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதுபோல, முன்புபோல இங்கு நடந்துகொண்டிருப்பது அதிமுக ஆட்சி இல்லை. இப்போது முதல்வராக இருப்பவர், எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர்செல்வமோ அல்ல. தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்பவர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
2010 தேர்தலில் எப்படி உங்களை விரட்டினோமோ, 2024 தேர்தலிலும் விரட்டுவோம் என கூறியதுடன், இந்தியாவில் முன்னேறிய மாநிலங்கள் இந்தி பேசாத மநிலங்கள் தான். இந்தியாவில் எந்த வகையில் இந்தியை திணித்தாலும் எண்களின் ஒரே பதில் இந்தி தெரியாது போடா என்பதுதான். இந்தி தெரியாது போடா என உங்களிடம் சொல்லி கொண்டேதான் இருப்போம்.
இது ஆர்ப்பாட்டம் தான், போராட்டமாக மாறுவது என்பது உங்கள் கையில் இருக்கிறது. இந்தி எதிர்ப்பு திமுகவின் முக்கியமான கொள்கைகளில் ஒனறு. எங்கள் கொள்கையில் இரந்து நாங்கள் சற்றும் விலகமாட்டோம், விட்டுக் கொடுக்கமாட்டோம். அது எங்கள் மாநில உரிமை. எங்களுடைய மாநில உரிமைகளை எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியாக இருந்தாலும் விட்டுக்கொடுக்க மாட்டோம். நாங்கள் அண்ணா, கலைஞர் வழியில் வந்தவர்கள்.
காரணம் நாங்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் வந்தவர்கள். இந்தி திணிப்பை எதிர்த்து ஆட்சியில் அமர்ந்தது திமுக. தற்போது ஆளுங்கட்சியாக இருப்பதால், ஒருநாள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம், கூடினோம், கலைந்து சென்றோம் என்று கண்டிப்பாக இருக்க மாட்டோம். நீங்கள் எந்த வழியில் இந்தி திணிப்பை தமிழகத்திற்குள் கொண்டு வந்தாலும், நாங்கள் உங்களிடம் சொல்லப்போகிற ஒரே வார்த்தை ” இந்தி தெரியாது போடா”. அதை எப்போதுமே சொல்லிக் கொண்டேயிருப்போம்.
முதல்கட்டப் போராட்டம் கலைஞர் அவர்கள் கட்டிக் கொடுத்த வள்ளுவர் கோட்டத்தில் நடத்தியிருக்கிறோம். நீங்கள் இந்தி திணிப்பை கையில் எடுத்தால், அடுத்தக்கட்ட போராட்டம் தமிழகத்தில் மட்டும் நடக்காது, தலைவரின் ஆணையைப் பெற்று டெல்லியில் வந்து போராட்டம் நடத்துவோம். அண்ணன் தயாநிதி மாறன் அவர்கள் கூறியதைப் போல, 2024 தேர்தல் பிரச்சாரத்துக்கு இது சிறந்த துவக்கமாக இது இருக்கும். 2019 போலவே 2024 தேர்தலிலும் பாசிச பாஜகவை தமிழக மக்கள் விரட்டியடிப்பார்கள்.
இவ்வாறு பேசினார்.