சென்னை: திமுக இளைஞரணியில் உறுப்பினராக சேர்வதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 15லிருந்து 18 என்பதாகவும், அதிகபட்ச வயது வரம்பு 30லிருந்து 35ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மேலும் கூறப்படுவதாவது; வரும் நவம்பர் 14ம் தேதிக்குள், ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் குறைந்தபட்சம் 10000 இளைஞர்கள் கட்சியின் இளைஞரணியில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட வேண்டும்.

மேலும், சுற்றுப்புறத்தில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுதல், நீர் நிலைகளை தூர் வாருதல் உள்ளிட்ட நற்பணிகளை இளைஞரணியினர் மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணிகள் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளையிலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.