சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக 174 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறைவான நாட்களே இருப்பதால் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகி இருக்கின்றன. திமுக கூட்டணியில் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு 25 தொகுதிகள், மதிமுக, மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 3, மமக 2, தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
இதன் மூலம், சட்டசபை தேர்தலில் 234 தொகுதியில் 174 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் திமுக போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகள் 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில், 13 கூட்டணி வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் களம் காண்கின்றனர்.
திமுக மற்று கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மொத்தம் 187 பேர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியை காங்கிரசுக்கு திமுக ஒதுக்கி உள்ளது.