டில்லி
திமுக எம்.பி டி.ஆர்.பாலு மிழக ஆளுநரைத் திரும்பப் பெறவேண்டும் என மத்திய அரசை டி ஆர் பாலு எம் பி வலியுறுத்தியதை தொடர்ந்து திமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவக் கல்லூரியில் சேர்க்கைக்கு நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயம் ஆககி உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் பல மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பபப்ட்ட்டது.
வெகு நாட்களாக கிடப்பில் போடப்பட்ட தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இது குறித்து பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை இந்த மாசோதா பாதிக்கும் என்று ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.
மேலும் இந்த மசோதாவை பிப்ரவரி 1-ம் தேதியே உரிய விளக்கத்துடன் சபாநாயகருக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டதாகவும் நீட் ரத்து மசோதாவை சட்டப்பேரவையில் மறு ஆய்வு செய்ய ஆளுநர் மாளிகை அறிவுறுத்தி உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் ஆளுநருக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இவ்வாறு நீட் மசோதாவைத் தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் அவருக்கு எதிராகத் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.
திமுக எம்.பி டி.ஆர்.பாலு ”ஆளுநருக்கு மசோதாவைத் திருப்பி அனுப்ப அதிகாரமில்லை. மசோதாவை 5 மாதங்களாக கிடப்பில் போட்டு வைத்துவிட்டு தற்போது திருப்பி அனுப்பியது எந்த வகையில் நியாயம்?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். மேலும் அவர் ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுந்ரும் தேவை அற்றவை என அறிஞர் அண்ணா கூறியதை சுட்டிக் காட்டி ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தினார்
இதையடுத்து மக்களவையில் திமுக உறுப்பினர்கள் ஆளுநர் ரவியைத் திரும்பப் பெறக் கோரி கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டுள்ளனர்.