சென்னை: திமுக நடத்தி வரும் மக்கள் கிராமசபை கூட்டங்களுக்கு ஏகோபித்த ஆதரவு பெருகி வருகிறது. இதையடுத்து, 2ம் கட்ட மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெறும் இடங்களை திமுக தலைமை அறிவித்து உள்ளது.

அதனப்டி, 7ந்தேதி முதல் திமுக 2ஆம் கட்ட கிராம சபை கூட்டங்கள் – அடுத்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் தொகுதி உள்பட முக்கிய அமைச்சர்களின் தொகுதிகளிலும் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,

நாளை  காலை ( 7 ஆம் தேதி) தரும‌புரி மாவட்டத்தில் அமைச்சர் அன்பழகனின் தொகுதியான பாலக்கோட்டில் கூட்டம் தொடங்குகிறது.

நாளை மாலை, முதலமைச்சர் பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில் கூட்டம் நடைபெறுகிறது.

இதையடுத்து, 8 ஆம் தேதி காலை அமைச்சர் தங்கமணியின் குமார பாளையம் தொகுதியிலும்,

மாலையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதியிலும் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார்.

இதையடுத்து, 9 ஆம் தேதியன்று அமைச்சர் உதயகுமாரின் திருமங்கலம் தொகுதியிலும், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் போடி தொகுதியிலும் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

இறுதியாக 10 ஆம் தேதியன்று அமைச்சர் ஜெயக்குமாரின் தொகுதியான சென்னை ராயபுரத்தில் கூட்டம் நடைபெறுகிறது.