சென்னை
வரும் 24 ஆ தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவரணி நீட் தேர்வு முறைகேட்டை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
கடந்த மாதம் நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் மறுதேர்வை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
வரும் 24 ஆம் தேதி நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து தி.மு.க. மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ளது.
ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமை தாங்குகிறார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவரணியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்கனவே நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக வரும் 21-ந்தேதி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.