சென்னை:
வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டு இடைக்கால ஜாமின் பெற்றிருந்த, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று நீதிமன்றத்தில் சரணமடைந்தார்.

நீதிபதிகள் நியமனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆர்.எஸ்.பாரதி மீது புகார் கூறப்பட்டதைத் தொடர்ந்து, வன்கொடுமை உள்பட பல சட்டப்பிரிவுகளில் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த மே மாதம் 23-ம் தேதி வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் ஆர்.எஸ் பாரதி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உடனே மே 31ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கியது.
இதை எதிர்த்து காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் சென்னை உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடியானது.
ஆர்.எஸ்.பாரதியின் இடைக்கால ஜாமீன் நேற்றுடன் முடிந்த நிலையில், வழக்கமான ஜாமீன் பெற நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார் ஆர்.எஸ்.பாரதி.
இன்றைய விசாரணையைத் தொடர்ந்து அவருக்கு ஜாமின் மேலும் நீட்டிக்கப்படுமா என்பது தெரிய வரும்
Patrikai.com official YouTube Channel