சென்னை: அடிப்பது கொள்ளை; கேட்டால் மிரட்டல்! அதிமுகவினரின் ரவுடித்தனத்தை ஒடுக்குவதே முதல்பணி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபடுள்ளனர். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் திமுக தலைவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிவதுடன், அதுதொடர்பான மனுக்களையும் பெற்று வருகிறது.
தேர்தல் பிரசாரத்தின்போது, அதிமுக மீது திமுகவும், திமுக மீது அதிமுகவும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிமுக ஆட்சியை விமர்சித்து ஒரு டிவீட் பதிவிட்டுள்ளார்.
அதில், அடிப்பது கொள்ளை; கேட்டால் மிரட்டல்! கோவை வேலுமணியின் குத்தகை பூமியா? கமிஷனுக்காக தேவையில்லாத இடங்களிலும் பாலம் கட்டுகிறது @CMOTamilNadu @SPVelumanicbe கூட்டணி!
அதிமுகவினரின் ரவுடித்தனத்தை ஒடுக்குவதே நம் ஆட்சியின் முதல்பணி என #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்வில் உறுதியளித்தேன் எனத் தெரிவித்துள்ளார்.