திருவாரூர்:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் தொகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் காட்சி வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

சிரித்த முகத்துடன் மக்களிடம் பேசியும், செல்ஃபி எடுத்தும் வரும் ஸ்டாலினை மக்கள் உற்சாகமாக வரவேற்று வருகின்றனர்.

மிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும், அதிமுக பாஜக தலைமையிலான கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

ஸ்டாலின் வாக்கு சேகரிக்கும் வீடியோ…

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதன் 2வது கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி, தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

திமுக தரப்பில் கூட்டணி இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் – 10, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்த சிறுமி

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக , திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது முதல் பாராளுமன்றம் மற்றும் 18 சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான பிரசாரத்தை.  திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது தந்தையின்   வீட்டில் இருந்து தொடங்கினார்.

முன்னதாக நேற்று இரவு ரயில் மூலம் திருவாரூர் சென்ற மு.க.ஸ்டாலினுக்கு திமுக வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து தனது திருவாரூர் வீட்டிற்கு வந்த ஸ்டாலின் காலையிலேயே தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டி யிடும் பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக, தெருத் தெருவாக நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வாக்குகள் சேகரித்து வருகிறார்.

ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுத்து  வருகின்றனர்.மு.க. ஸ்டாலினை எதிர்பார்த்து சாலையில் காத்திருந்த ஏராளமானோர் அவருடன் கை குலுக்கிக் கொண்டனர். மேலும் சில சிறுமிகள் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். தங்களது வாக்கு உதய சூரியனுக்கு என்று வாழ்த்தி வருகின்றனர்.

தொடர்ந்து காலை 10 மணியளவில் திருவாரூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், மாலை 5 மணியளவில் தஞ்சையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் ஸ்டாலின் பேசுகிறார்.

ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்த சிறுமி வீடியோ…

Video Courtesy: twitter.com/DMK4TN