சென்னை:

மிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குனேரி தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குனேரி தொகுதியில் காங்கிரசும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்றுமுதல் வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக ஆகிய இரண்டும் வேட்பாளர்கள் யார் என்பதை இதுவரை  அறிவிக்காத நிலையில், அங்கு தேர்தல் பணிகள் சுறுசுறுப்படைந்து உள்ளன.

விக்கிரவாண்டி தொகுதியில், கடந்த ஜூன் மாதம் திமுக எமஎல்ஏ ராதாமணி காலமானதைத் தொடர்ந்து, நடைபெறும்  இடைத்தேர்தலில் திமுக மீண்டும் போட்டியிடுகிறது. விக்கிரவாண்டி தொகுதியில், அதிமுக, பாமக பலமாக உள்ள நிலையில், அங்கு போட்டி கடுமையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு வெற்றியை தீர்மாணிப்பதில் வன்னியர்கள் ஓட்டு முக்கிய பங்காற்றும்.

கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது விக்கிரவாண்டி தொகுதிகளில் மும்முனை போட்டி நிலவிய நிலையில், அங்கு போட்டியிட்ட பாமக வேட்பாளரை விட திமுக 6 ஆயிரம் வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் பாமக 42ஆயிரம் வாக்குகளை பாமக தனியாக பெற்ற நிலையில், இந்த தேர்தலில் அதிமுகவுடன் இணைந்துள்ளதால் போட்டி பலமாக உள்ளது.

ஆனால், சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் விசிகவைச் சேர்ந்த ரவிக்குமார் வெற்றி பெற்றிருந்த நிலையில், விக்கிவாண்டி சட்டசபை தொகுதியிலும் திமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருந்தன. இதன் காரணமாக, இடைத்தேர்தலிலும் திமுக வெற்றிபெறும்  திமுக தலைவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் வன்னியர்கள் வாங்கு அதிகமாக உள்ளதால், அங்கு வன்னியர்கள் வாக்குகளை பெறும் வகையில், திமுக உள்பட   கூட்டணி கட்சியினர் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அங்கு திமுகவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியினரை வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து கூறிய திமுகவைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர், விக்கிரவாண்டி தொகுதியில் எங்களுக்கு உள்ள சவால்களை அறிவோம் என்றவர், ஆனாலும் எங்களது வெற்றி உறுதி செய்யப்பட்டது என்று கூறுகிறார்.

இதுகுறித்து கூறிய விழுப்புரம் தொகுதி எம்.பி.யான விசிகே சிவகுமார்,   தொகுதியில் உள்ள தலித்களின் 30சதவிகிதம் வாக்குகள் தங்களுக்கே கிடைக்கும் என்றவர்,  இது திமுகவின் வெற்றியை உறுதிப்படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

மேலும், இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள குடிதண்ணீர் பற்றாக்குறை மாநில அரசுக்கு பெரும் பின்னடைவை கொடுக்கும் என்றவர்,  மாநில அரசு பல திட்டங்களை அறிவித்த போதிலும், அவை எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்று ரவிக்குமார் குற்றம் சாட்டினார்.