சென்னை:
ஊரகப்பகுதிகளில் உள்ளாட்சி தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், திமுக சார்பில் காவல்துறை டிஜிபியிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
மனுவில், மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய குழுவிற்கான மறைமுக தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
தமிகத்தில் 27 மாவட்டங்களில், ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்து வெற்றி பெற்றவர்கள் கடந்த 6-ம் தேதி பதவி ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி துணைத் தலைவர் ஆகிய 5 பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இந்த நிலையில், திமுக சட்டதுறை செயலாளர் கிரிராஜன் தலைமையில் திமுகவினர், செனையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் மறைமுக தேர்தல் தொடர்பாக புகார் மனு அளித்தனர். அதில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி திமுக ஒன்றிய கவுன்சிலர் தாக்கப்பட்டு, அவரது வாகனத்திற்கு தீ வைத்தை சுட்டிக் காட்டி, இன்று நடைபெற உள்ள உள்ளாட்சி மறைமுக தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை வைத்தனர்.