டெல்லி: கரூரில் விஜய் கூட்டத்தில் நெரிசல் ஏற்படப்போகிறது மதியம் 3.15 மணிக்கே திமுக நபர் வலைதளப்பதிவு போட்டுள்ளதை உச்சநீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய   தவெக தரப்பு வழக்கறிஞர், இந்த பதிவு போட்டவர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர் என்றும் குறிப்பிட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக, இந்த கூட்ட நெரிசல்  மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மின்சாரம் நிறுத்தப்பட்ட விவகாரம், போலீசார் தடியடி, சம்பவம் குறித்து அரசு மற்றும் செந்தில் பாலாஜியின் உடனடியாக ரியாக்ஷன்,  ஒரே இரவில் இறந்தவர்களின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை, சில மணி நேரங்களில், விசாரணை கமிஷன் அமைப்பு மற்றும் அடுத்தநாளே விசாரணை போன்ற சம்பவங்கள் திமுக அரசு மீதான நம்பக்கத்தன்மைமீது ஏராளமான சந்தேகங்களை உருவாக்கியுள்ள நிலையில், தற்போது,  திமுக பிரமுகரின் சமூக வலைதளபதிவு, அதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கரூரில் மக்களை சந்தித்து உரையாற்றியபோது, கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரசாரத்திற்கு போதுமான இடம் வழங்கப்படவில்லை. இதுதான் கூட்ட நெரிசலுக்கு காரணம் என்றும், போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்னும் த.வெ.க. சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.

அதேவேளையில் த.வெ.க. கட்சி நிர்வாகிகளின் குறைபாடுதான் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் என அரசு சார்பில் குற்றம்சாட்டுப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து த.வெ.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோல், கூட்ட நெரிசலுக்கான உண்மையான காரணத்தை கண்டறிய, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் பிரித்திக்கின் தந்தை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

இதற்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்தது.  மாநில காவல்துறைக்கு எதிரான குற்றச்சாட்டு என்பதற்காகவே, சிபிஐ-க்கு வழக்கை மாற்ற வேண்டியதில்லை. சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்  ஒரு காரணத்தின் அடிப்படைக் கொண்டு மட்டும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற அனுமதிக்க கூடாது. ஏனெனில் கள நிலவரங்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் தமிழ்நாடு அதிகாரிகள். எனவே ஒரு சிறந்த அதிகாரியின் தலைமையில் அமைக்கப்பட்ட அந்த சிறப்பு விசாரணைக் குழுவில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர வேண்டும் என்று கூறியதுடன்,  இவ்வாறு பல வழக்குகளை தொடர்ச்சியாக சிபிஐ-க்கு மாற்றிக் கொண்டிருந்தால் சிபிஐ முன்பு அதிக அளவிலான வழக்குகள் குவிந்து கிடக்கும். ஆனால் சிபிஐக்கு இருப்பதோ Limited Resourceதான்.  தவிர்க்க முடியாத சூழலில்தான் வழக்கை சிபிஐ-க்கு மாற்றலாம் என உச்சநீதிமன்றமே சொல்லியுள்ளது என்பதை சுட்டிக்காட்டியது.

இதையடுத்து, தவெக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், விஜய் பிரசாரத்திற்கு போதுமான இடம் வழங்கப்படவில்லை. இதுதான் கூட்ட நெரிசலுக்கு காரணம் என்றும், போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்னும் த.வெ.க. சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும்,  அதேபோல், கூட்ட நெரிசலுக்கான உண்மையான காரணத்தை கண்டறிய, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் பிரித்திக்கின் தந்தை சார்பில் வாதாடப்பட்டது. அப்போது,  கரூரில் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்படப்போகிறது என மதியம் 3.15 மணிக்கே திமுக உறுப்பினர் ஒருவர் வலைதளப்பதிவு போட்டிருந்தார் என்பதை சுட்டிக்காட்டியதுடன், இந்த பதிவு போட்டவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடையவர்  என்பதையும் கூறினார்.

ஏற்கனவே விஜய் பிரசாரத்துக்கு, வேலுச்சாமிபுரம் இடையூறாக இருக்கும் என கூறி ஜனவரியில்  காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் செப்டம்பர் மாதம் திடீரென அனுமதி வழங்கப்பட்டது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும்,  மேலும் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது,  திடீரென காவல்துறை கூட்டத்திற்குள் தடியடி நடத்தியது. எதற்கு தடியடி நடக்கிறது எனத் தெரியாமல் பலர் ஓடினர் என்றும் குறிப்பிடப்பட்டது.

மேலும், விஜய் பிரசாரத்தின்போது அவரது வாகனம் மீது மர்ம நபர்கள் செருப்பு வீசினர் என்பதை கூறியதுடன், அப்போது கூட கூடத்தில் எந்த சலசலப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்த வழக்கறிஞர், போலீசார் பாதுகாப்பு முற்றிலும் இல்லை என்று கூறினார்.

ஆனால்,  600 போலீசார் பாதுகாப்பில் இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது. அவர்கள் எங்கே இருந்தார்கள்?.  கூட்ட நெரிசலில் ஒரு போலீசாருக்கு கூட காயம் ஏற்படவில்லை. ஏன்?  என கூறியதுடன்,   இந்த விவகாரத்தில் பல்வேறு குழப்பங்கள் உள்ளது, அதனால் இதை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த வழக்கில்,  பாதிக்கப்பட்டோர் தரப்பில் வாதிடும் போது கூட காவல் துறையின் மீதும் செந்தில் பாலாஜி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதில் விஜய் தப்பி ஓடவில்லை, காவல்துறையின் வலியுறுத்தல் காரணமாகவே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் என்று தவெக சார்பில் வாதிடப்பட்டது. வழக்கு விசாரணையின் முடிவில் விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.